அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி தெரிவிக்கும் தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளது.
தூதரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூதரகத்தின் வழமையான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




