Wednesday, 18 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 10°
  • ஈரப்பதம் 55%
  • காற்று 16 km/h
  • ஸ்காபரோ 15°
  • மார்க்கம் 15°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 15°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.00%
  • EUR 1.57 ▼ 0.05%
  • GBP 1.89 ▲ 0.10%
  • CHF 1.70 ▼ 0.06%
  • AUD 0.96 ▼ 0.12%
  • 1 CAD → LKR 232.81 ▲ 0.05%
  • 1 CAD → INR 65.39 ▼ 0.47%
  • AED 0.39 ▼ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-18 17:25
அண்மைச் செய்திகள்
டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது! கனடாவில் பிரபல உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறல்! கனடாவின் கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் கைப்பேசித் தடை சஷி வீரவங்சவுக்கு எதிரான சிறைத்தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்றி வளர்ப்பதற்கு தடை விதித்த தனது கணவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லா தாம்சன் என்ற பெண், தனது வீட்டில் பன்றிகளை வளர்ப்பதில் அதிகமான ஆர்வம் கொண்டுள்ளார். ஆனால் இவரது கணவருக்கு வீட்டில் விலங்குகளை வளர்ப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் வீட்டில் பன்றிகளைத் வளர்ப்பதற்கு தொடர்ந்து தடை விதித்து வந்துள்ள நிலையில், ஒரு கட்டத்தில் பன்றி வளர்க்கும் தனது ஆசைக்கு தடையாக இருக்கும் கணவரால் அதிருப்தி அடைந்துள்ளார் கெய்லா.

பின்பு தனது கணவருடன் வாழ்வதிலும் அர்த்தமே இல்லை என்று முடிவு எடுத்துள்ளார். இதனால் தனக்கும் கணவருக்கும் இடையே இருந்த 10 ஆண்டு கால திருமண வாழ்க்கையினை முறித்துக் கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையை முறித்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்தும் பெற்றுள்ளார்.

கணவரை விவாகரத்து செய்த உடனே தனது ஆசையை நிறைவேற்ற நினைத்தவர் பன்றிக்குட்டியை ஒன்றினை சொந்தமாகத் தத்தெடுத்துள்ளார். மேலும் அதற்கு டெய்ஸி என்று பெயரும் வைத்துள்ளார்.

மேலும் குறித்த பெண் தத்தெடுத்த பன்றிக்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தினையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவரை பன்றிக்கு ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதாவது அவர் கொடுத்துள்ள பதிவில், என் வாழ்க்கையில் இருந்து ஒரு பன்றியை நீக்கிவீட்டு, அதற்கு பதில் உண்மையான பன்றி ஒன்றினை தத்தெடுத்துக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

கெய்லா கிண்டலாக தனது முன்னாள் கணவருக்கு பகிரங்கமாக கொடுத்த பதிலடி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

கெய்லா தாம்சன் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் பன்றிக்குட்டியை தனது மடியில் போட்டு விட்டு மற்றொரு கையில் அதற்கான பால் பாட்டிலையும் தனது கையில் வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தினை கேள்விப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் திருமண வாழ்க்கையில் பெண்கள் எடுக்கும் முடிவுகள் வினோதமாக இருப்பதாகவும், பன்றிக்காக 10 ஆண்டுகள் வாழ்ந்த கணவரை இப்படியா விவாகரத்து செய்வது என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.