Wednesday, 18 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 10°
  • ஈரப்பதம் 55%
  • காற்று 16 km/h
  • ஸ்காபரோ 15°
  • மார்க்கம் 15°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 15°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.00%
  • EUR 1.57 ▼ 0.05%
  • GBP 1.89 ▲ 0.10%
  • CHF 1.70 ▼ 0.06%
  • AUD 0.96 ▼ 0.12%
  • 1 CAD → LKR 232.81 ▲ 0.05%
  • 1 CAD → INR 65.39 ▼ 0.47%
  • AED 0.39 ▼ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-18 17:25
அண்மைச் செய்திகள்
டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது! கனடாவில் பிரபல உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறல்! கனடாவின் கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் கைப்பேசித் தடை சஷி வீரவங்சவுக்கு எதிரான சிறைத்தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை!

ரியல் எஸ்டேட் துறையில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு, வீடு வாங்குவோர் மற்றும் வாடகைக்கு எடுப்போர் மத்தியில் பெரும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

இணையத்தில் பார்க்கும் வீட்டின் புகைப்படத்திற்கும், நேரில் சென்று பார்க்கும் வீட்டிற்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகளை அழகாக வடிவமைத்துக் காட்டுவதற்காக முகவர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தற்போது சாதாரணமாகிவிட்டது.

ஆனால், இதன் மூலம் வீட்டின் அறைகளை உண்மையான அளவை விடப் பெரிதாகக் காட்டுவது, இல்லாத வசதிகளை இருப்பது போலச் சித்தரிப்பது போன்ற தவறான வழிநடத்தல்கள் நடப்பதாகத் துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபத்தில் டொராண்டோவில் Airbnb மூலம் தங்குமிடம் ஒன்றை முன்பதிவு செய்த குடும்பம் ஒன்று, இணையத்தில் இருந்த ஆடம்பரப் புகைப்படங்களை நம்பிச் சென்று, நேரில் சாதாரண அறை இருந்ததைக் கண்டு ஏமாற்றமடைந்த சம்பவம் இந்த AI மோசடிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். “AI தொழில்நுட்பம் ஒரு வீட்டின் அழகை மேம்படுத்தலாமே தவிர, அந்த வீட்டையே வேறு ஒன்றாக மாற்றக்கூடாது.

வீட்டின் நிரந்தர அமைப்புகளை மாற்றி அமைப்பது மிகப்பெரிய எச்சரிக்கை அறிகுறியாகும் என ரியல் எஸ்டேட் முகவர் அம்ரித் வாலியா எச்சரித்துள்ளார். புகைப்படத்தில் உள்ள பொருட்கள் உண்மையானவையா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டவையா என்பதைக் கண்டறிய, வாடிக்கையாளர்கள் துப்பறியும் நபர்களாக மாற வேண்டிய அவல நிலை ஏற்படக்கூடாது என டொராண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷியோன் குஹா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த ஒன்ராறியோ ரியல் எஸ்டேட் கவுன்சில் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. விளம்பரங்களில் AI பயன்படுத்தப்பட்டிருந்தால், அதனை முகவர்கள் கட்டாயம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தவறான அல்லது மக்களைத் திசைதிருப்பும் வகையிலான AI புகைப்படங்களைப் பயன்படுத்தும் முகவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டொராண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் வாரியம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் RECO-விற்கு வந்த சுமார் 2,500 புகார்களில், 12 சதவீதப் புகார்கள் சொத்து குறித்த தவறான தகவல்களை வழங்கியமை தொடர்பானவை.

எனவே, இணையத்தில் வெளியாகும் கவர்ச்சிகரமான AI புகைப்படங்களை மட்டும் நம்பி ஏமாறாமல், சொத்துக்களை நேரில் சென்று ஆய்வு செய்வதே பாதுகாப்பானது என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.