Tuesday, 17 November 2026
கனடா வானிலை
12°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 8°
  • ஈரப்பதம் 69%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 12°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 12°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.89 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.69 • 0.00%
  • 1 CAD → INR 65.70 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-17 17:01
அண்மைச் செய்திகள்
ரோசரி மணியால் கண்ணில் அடிபட்ட போப்பாண்டவர், மன்னிப்பு வழங்கினார்! உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்? ‘போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ – இந்திய பிரதமர் வலியுறுத்து ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கசிவுகள் – சுற்றுச்சூழல் அபாயம் குறித்து எச்சரிக்கை ‘ஈரானுடன் இன்று சந்திப்பு நடைபெறும்’ – கட்டார் அதிகாரி தெரிவிப்பு சிலாபத்தில் கோர விபத்து! ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயம் யாழில் சிறீதரன் எம்.பியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய தொல்.திருமாவளவன்! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் – அவசர மருத்துவ சிகிச்சை கோரும் இம்ரான் கான்! தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு! மும்பை வீதியில் கிரிக்கெட் விளையாடி அசத்திய பிரித்தானிய இளவரசர் தம்பதி!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

ரோசரி மணியால் கண்ணில் அடிபட்ட போப்பாண்டவர், மன்னிப்பு வழங்கினார்!

பெரு (Peru) நாட்டின் லிமா நகரில் உள்ள விமானப்படைத் தளத்தில், சுமார் 1.5 மில்லியன் மக்கள் கலந்துகொண்ட இறுதித் திருப்பலிக்குச் செல்வதற்காக போப்பாண்டவர் போப் லியோ XIV (Pope Leo XIV) திறந்த வாகனத்தில் (Popemobile) வலம்வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவரால் வீசப்பட்ட ரோசரி மணி (Rosary) நேராக போப்பாண்டவரின் கண்ணில் பலமாகப் பட்டது.

அடிபட்டதும் அவர் சற்று முகம் சுளித்து கண்ணைத் தடவிக்கொண்டாலும், எதையும் பொருட்படுத்தாமல் தனது நிகழ்வைத் தொடர்ந்து நடத்தினார்.

தன் சொந்த ஊருக்குத் திரும்பும் விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஒரு பெரு நாட்டுப் பத்திரிகையாளர் இந்தச் சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார். அதற்கு போப் லியோ, அதை ஒரு குறையாக நினைக்காமல், “அவர் மிகுந்த பக்தியோடு எனக்கு ஒரு ரோசரி மணியைப் பரிசளிக்க முயன்றுள்ளார். இது மக்கள் மீதான அன்பையும், கடவுளின் ஆசி பெற வேண்டும் என்ற அவர்களின் தீவிரமான பக்தியையும் காட்டுகிறது” என்று கூறி அதனை நகைச்சுவையுடன் கடந்து சென்றார்.

இதுபோன்று போப்பாண்டவர் கூட்டத்திற்கு நடுவே செல்லும் போது மக்கள் பரிசுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் ஜெர்சிகளை வீசுவது வழக்கம். இவற்றைப் போப் தனது அசாத்திய திறமையால் பிடித்து விடுவார் என்றாலும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது எப்போதும் ஒரு பெரிய கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.