
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் எண்ணெய் கசிவுகள் வளைகுடா சுற்றுச்சூழல் அமைப்புகளில் நீடித்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என கிரீன்பீஸ் எச்சரிக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் பெப்ரவரியில் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணையில் கிட்டத்தட்ட 150 எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு கூறுகிறது.
சேதமடைந்த எண்ணெய்க் கப்பல்களில் இருந்து கசிந்த எண்ணெய், பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.
இந்நிலையில், பவளப்பாறைகள், ஆமைகள் முட்டையிடும் இடங்கள் மற்றும் கூன்முதுகு திமிங்கலங்கள் ஆகியவை நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று கிரீன்பீஸ் MENA-வின் நிர்வாக இயக்குனர் கிவா நகத் தெரிவித்துள்ளார்.




