Tuesday, 17 November 2026
கனடா வானிலை
12°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 8°
  • ஈரப்பதம் 69%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 12°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 12°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.89 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.69 • 0.00%
  • 1 CAD → INR 65.70 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-17 17:01
அண்மைச் செய்திகள்
ரோசரி மணியால் கண்ணில் அடிபட்ட போப்பாண்டவர், மன்னிப்பு வழங்கினார்! உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்? ‘போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ – இந்திய பிரதமர் வலியுறுத்து ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கசிவுகள் – சுற்றுச்சூழல் அபாயம் குறித்து எச்சரிக்கை ‘ஈரானுடன் இன்று சந்திப்பு நடைபெறும்’ – கட்டார் அதிகாரி தெரிவிப்பு சிலாபத்தில் கோர விபத்து! ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயம் யாழில் சிறீதரன் எம்.பியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய தொல்.திருமாவளவன்! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் – அவசர மருத்துவ சிகிச்சை கோரும் இம்ரான் கான்! தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு! மும்பை வீதியில் கிரிக்கெட் விளையாடி அசத்திய பிரித்தானிய இளவரசர் தம்பதி!
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?

தஞ்சாவூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம்பெறச் செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார்.

மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது கல்லணை மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து பெரிய கோவில் குறித்து சஞ்சய் குமார் ஜா கூறியதாவது:

“தஞ்சாவூர் பெரிய கோவில் இந்தியாவின் ஓர் அதிசயம். இதுவரை வட இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹாலை மட்டுமே மிகப்பெரிய அதிசயமாக நினைத்திருந்தோம். ஆனால், தஞ்சாவூர் பெரிய கோவில் அதைவிட பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரமாண்டமான கோவிலை உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது. இது நமது நாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.

ஏற்கனவே யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய நினைவுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரிய கோவிலை, உலக அதிசய பட்டியலில் சேர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு சார்பில் நிச்சயம் பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில், சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோவில், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளையும் வரலாற்று ஆர்வலர்களையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம்பெறச் செய்ய பரிந்துரைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.