Tuesday, 17 November 2026
கனடா வானிலை
12°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 8°
  • ஈரப்பதம் 69%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 12°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 12°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.89 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.69 • 0.00%
  • 1 CAD → INR 65.70 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-17 17:01
அண்மைச் செய்திகள்
ரோசரி மணியால் கண்ணில் அடிபட்ட போப்பாண்டவர், மன்னிப்பு வழங்கினார்! உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்? ‘போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ – இந்திய பிரதமர் வலியுறுத்து ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கசிவுகள் – சுற்றுச்சூழல் அபாயம் குறித்து எச்சரிக்கை ‘ஈரானுடன் இன்று சந்திப்பு நடைபெறும்’ – கட்டார் அதிகாரி தெரிவிப்பு சிலாபத்தில் கோர விபத்து! ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயம் யாழில் சிறீதரன் எம்.பியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய தொல்.திருமாவளவன்! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் – அவசர மருத்துவ சிகிச்சை கோரும் இம்ரான் கான்! தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு! மும்பை வீதியில் கிரிக்கெட் விளையாடி அசத்திய பிரித்தானிய இளவரசர் தம்பதி!
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

‘போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ – இந்திய பிரதமர் வலியுறுத்து

போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். உலகில் தற்போது அமைதி மட்டுமே தேவை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 23வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்,”கடந்த சில ஆண்டுகளாக உலகம் அடுத்தடுத்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 

நாடுகளுக்கு இடையே போட்டி தேவை இல்லை, ஒத்துழைப்பே அவசியம். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இணைந்து உலகின் மக்கள் தொகையில் கால் பங்கைக் கொண்டுள்ளன. 

இன்று, இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமானச் சேவைகளும், வளர்ந்து வரும் சுற்றுலாவும் நமது உறவு அதிகரித்து வருவதற்கான சான்றுகளாகும்.

நமது பிராந்தியத்தின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் இணைந்து ஒரு புதிய பாதையை வகுக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து, இந்தப் பிராந்தியத்தை அமைதியின் அடையாளமாக மாற்ற முடியும்.”என தெரிவித்துள்ளார்.