
தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவாசுலு-நடால் மாகாணத்தில் மினி பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மேற்கு பிரிட்டோரியாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவங்களுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

