
ரஷ்யாவில், உதிரி பாகங்களை ஏற்றிச்சென்ற ‘ஏ.என்.12’ என்ற இராணுவ விமானம் விமானத்தில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோவோசிபிர்ஸ்கில் இருந்து நேற்று (17) கான்ஸ்க் நோக்கிப் பயணித்த இந்த விமானம்,கெமரோவோ பகுதியில் உள்ள யாகுனோவோ கிராமத்திற்கு அருகே பறந்த போது, திடீரென விமானத்தில் தீப்பிடித்தது.
தாழ்வாக பறந்த இராணுவ விமானம், கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தரையிறங்க முயன்ற விமானம் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


