Wednesday, 18 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 10°
  • ஈரப்பதம் 55%
  • காற்று 16 km/h
  • ஸ்காபரோ 15°
  • மார்க்கம் 15°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 15°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.00%
  • EUR 1.57 ▼ 0.05%
  • GBP 1.89 ▲ 0.10%
  • CHF 1.70 ▼ 0.06%
  • AUD 0.96 ▼ 0.12%
  • 1 CAD → LKR 232.81 ▲ 0.05%
  • 1 CAD → INR 65.39 ▼ 0.47%
  • AED 0.39 ▼ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-18 17:25
அண்மைச் செய்திகள்
டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது! கனடாவில் பிரபல உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறல்! கனடாவின் கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் கைப்பேசித் தடை சஷி வீரவங்சவுக்கு எதிரான சிறைத்தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

கனடாவில் பிரபல உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறல்!

 உணவுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பூச்சிகள் மற்றும் உலோகத் துகள்கள் கலந்திருப்பது போன்ற குறைபாடுகளால் கனடாவில் சில உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கனேடிய உணவுப் பரிசோதனை முகவர் நிலையம் தனது இணையத்தளத்தில் எச்சரிக்கை மற்றும் திரும்பப் பெறும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள் வருமாறு: ‘ட்ரீ ஆஃப் லைஃப் கனடா’ நிறுவனம் தனது ‘புரொடியூசர்ஸ்’ பிராண்ட் பழுப்பு அரிசியில் பூச்சிகள் இருப்பதன் காரணமாக அதனைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22.6 கிலோகிராம் எடையுள்ள அரிசிப் பொதிகள் அல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூ பிரன்சுவிக், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர், நோவா ஸ்கோஷியா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கோல்ட் கிரைண்ட்’ பிராண்ட் இயற்கை மஞ்சள் தூளில் அனுமதிக்கப்படாத ‘சூடான் I’ எனும் நிறமி கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இத்தயாரிப்பைப் பயன்படுத்தியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கருதுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை எவருக்கும் உடல்நலப் பாதிப்புகள் பதிவாகவில்லை எனவும், இது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கியூபெக்கைத் தளமாகக் கொண்ட ஆர்ச்சிபால்ட் நிறுவனம், தனது ‘Nuit Blanche White IPA’ பியரில் உலோகத் துகள்கள் (Metal pieces) கலந்திருப்பதன் காரணமாக அதனைத் திரும்பப் பெற்றுள்ளது.

மேற்கண்ட பாதிக்கப்பட்ட பொருட்களை எவரும் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, பரிமாறவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என கடுமையாக எச்சரித்துள்ளது.

இதேவேளை, உலோகத் துகள்கள் கலந்திருந்த காரணத்தால் அண்மையில் Molson Canadian, Coors Light, Blue Moon ஆகிய பிரபல பியர் வகைகளும் திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.