
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா “மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருடனான சந்திப்பின் போதே கூறியுள்ளார்.
ஈரான் விவகாரம் குறித்த அவரது இந்தக் கருத்துகள், பிலிப்பைன்ஸுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை அமெரிக்கா விரிவுபடுத்தி வருவதாகவும், அணுசக்தி துறையில் “பெரிய அளவிலான” நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்றும் அவர் அறிவித்த சூழலில் வெளியாகியுள்ளன.

