Tuesday, 24 November 2026
கனடா வானிலை
-3°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 87%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ -2°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -2°
  • மிசிசாகா -1°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.44 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.34%
  • GBP 1.87 ▼ 0.20%
  • CHF 1.71 ▲ 0.08%
  • AUD 0.95 ▼ 0.00%
  • 1 CAD → LKR 231.50 ▼ 0.24%
  • 1 CAD → INR 64.71 ▲ 0.09%
  • AED 0.39 ▲ 0.19%
புதுப்பிப்பு: 2026-11-24 11:42
அண்மைச் செய்திகள்
ஹிஜாப் இல்லாத இசை நிகழ்ச்சி – ஈரானிய பாடகிக்கு கிடைத்த அதிர்ச்சித் தண்டனை! மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு! இஸ்ரேலியர்களுக்கு இலவச விசா – நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தா? நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை! ஜெயிலர் 3′ படத்தில் மதிமலர்? ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறாரா? நவம்பர் 26, 27ஆம் திகதிகளில் அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்! ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! சதாம் உசைன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் ஏலத்திற்கு..! ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை – பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல் காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்!
விளம்பரம்விளம்பரம்
சினிமா பிளஸ்

ஜெயிலர் 3′ படத்தில் மதிமலர்? ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலர் ராமமூர்த்தி தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

சென்னையைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி, பிரபல மருத்துவர் எஸ். ராமமூர்த்தி மற்றும் நித்யா ராமமூர்த்தி ஆகியோரின் மகளாவார்.

இவர் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி முத்தையா முரளிதரனைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின்போது அவருக்கு 24 வயது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தற்போது அவருக்கு சுமார் 45 வயதாகிறது. வணிக முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள மதிமலர், இரண்டு பிள்ளைகளுக்கு தாயாவார்.

திரையுலகப் பின்னணி இல்லாத இவர், பொதுவாழ்வில் அதிகம் தோன்றாமல் தனிப்பட்ட வாழ்க்கையை அமைதியாகக் கொண்டுசென்று வருகிறார்.

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் மதிமலர் இணைந்திருப்பது போன்ற நிழற்படங்களும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகக் கூறப்படும் ‘ஜெயிலர் 3’ திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

எனினும், மதிமலர் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாகவோ அல்லது ‘ஜெயிலர் 3’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவோ படக்குழுவினரிடமிருந்தோ, நடிகர் ரஜினிகாந்திடமிருந்தோ உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்தத் தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே உள்ளன.