Monday, 23 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 2°
  • ஈரப்பதம் 82%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 6°
  • மார்க்கம் 6°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 6°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 09:18
அண்மைச் செய்திகள்
காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்! யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மின்மினிப் பூச்சி! அம்மா உணவகத்தில் வாலிபர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் கைது பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்திகள்

காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, தனது காதலியான மஹீகா சர்மாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் நிறைந்த பதிவொன்றைப் பகிர்ந்துகொண்ட அவர் இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இறுதியாக அவள் எனக்குச் சொந்தமானாள்” (Finally she’s mine) எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவும் மஹீகா சர்மாவும் தங்களது காதல் உறவு தொடர்பில் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருந்தனர்.

இந்தநிலையில், இருவரும் தங்களது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராகியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாண்டியாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் அவருக்கும் மஹீகா சர்மாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் மைதானத்தில் பல வெற்றிகளைப் பதிவு செய்துவரும் ஹர்திக் பாண்டியா, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.