தமிழகத்தின் பிரபல நடிகை த்ரிஷாவின் பெயரில், ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்ற புதிய அமைப்பு திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், குறித்த பேரவை தொடர்பான அறிவிப்பை அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் வெளியிட்டுள்ளார்.
இதன்போது, திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு குறித்த பேரவை செயல்படவுள்ளதாகவும், அதன் இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையின் இலச்சினையில், நடிகை த்ரிஷாவின் உருவப்படத்துடன், ‘பதவிக்காக அல்ல; தமிழக மக்களின் உரிமைக்காக’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.




