Monday, 23 November 2026
கனடா வானிலை
6°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 3°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 13 km/h
  • ஸ்காபரோ 6°
  • மார்க்கம் 6°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 6°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 09:18
அண்மைச் செய்திகள்
யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மின்மினிப் பூச்சி! அம்மா உணவகத்தில் வாலிபர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் கைது பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கை கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினால், புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை நடத்தத் தாம் நாட்டம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக ‘பொக்ஸ் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அத்தொலைக்காட்சிக்குத் தெரிவித்த ட்ரம்ப், அப்பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதமை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களை “தொழில்முறை நடனக் கலைஞர்கள்” (professional tap dancers) என வர்ணித்த ஜனாதிபதி, “அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் பேசுவது மட்டும்தான், ஆனால் அவை அனைத்தும் அர்த்தமற்றவை” எனக் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கக் கடற்படை விதித்துள்ள முற்றுகை தொடரும் நிலையிலும், ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை தெஹ்ரான் சோதித்துப் பார்க்கக்கூடும் என ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, அதனைக் கடக்க முயற்சிக்கும் ஈரானியக் கப்பல்கள் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்தார்.

முற்றுகையை மீற முயற்சிக்கும் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஈரானில் மீண்டும் வெடித்துள்ள போராட்டங்களின் காணொளிகளைப் பார்வையிட்ட பின்னர், அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் தமது போராட்டங்களைத் தொடருமாறும் ட்ரம்ப் ஊக்குவித்ததாக பொக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய புதிய தாக்குதல்கள் மற்றும் பஹ்ரைனிலுள்ள அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த தகவல்களைத் தொடர்ந்தே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடுத்ததிலிருந்து பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து உச்சக்கட்டத்தில் உள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் பிராந்தியம் முழுவதுமுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது.

மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வொஷிங்டனும் தெஹ்ரானும் கடந்த ஜூன் மாதம் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன. 

எனினும், ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அப்பேச்சுவார்த்தைகள் பின்னர் ஸ்தம்பிதமடைந்தன.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடர் முயற்சிகளுக்கு மத்தியிலும், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் கடந்த ஜூலை மாதம் முதல் இடைக்கிடையே தீவிரமடைந்து வருகின்றன.