Monday, 23 November 2026
கனடா வானிலை
6°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 3°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 13 km/h
  • ஸ்காபரோ 6°
  • மார்க்கம் 6°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 6°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 09:18
அண்மைச் செய்திகள்
யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மின்மினிப் பூச்சி! அம்மா உணவகத்தில் வாலிபர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் கைது பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கை கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைத் தனது நண்பர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் ஜே கிளேட்டன் விளக்கமளித்துள்ளார்.

ABC தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அவர், ட்ரம்ப் மற்றும் புட்டின் இடையிலான சந்திப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கது என வர்ணித்ததுடன், ட்ரம்பின் கருத்துகளும் பொருத்தமானவை எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புட்டின் அமெரிக்காவின் நண்பர் அல்ல. ஒருபோதும் இல்லை” என ஜே கிளேட்டன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 19ஆம் திகதி சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின்போது, ட்ரம்ப், புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் முத்தரப்புச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது புட்டினை அன்புடன் வரவேற்ற ட்ரம்ப், “அவர் எனது நண்பர்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரது சந்திப்புப் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்பின் இந்த அணுகுமுறை தொடர்பில் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆதரவு குறைந்துள்ளமை தொடர்பிலும் விமர்சகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ரஷ்யத் தலைவருடன் தனிப்பட்ட நல்லுறவை ஏற்படுத்துவதற்காக ட்ரம்ப் நட்புறவு வார்த்தைகளைப் பயன்படுத்துவது பொருத்தமானது என ஜே கிளேட்டன் தெரிவித்துள்ளார்.

மேலும், அணுவாயுத அபாயங்களைக் குறைப்பது தொடர்பில் உலகின் மூன்று முக்கிய அணுவாயுத வல்லரசுகளின் தலைவர்களையும் ஒரே மேசைக்குக் கொண்டுவந்தமை பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.