Tuesday, 17 November 2026
கனடா வானிலை
12°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 8°
  • ஈரப்பதம் 69%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 12°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 12°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.89 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.69 • 0.00%
  • 1 CAD → INR 65.70 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-17 17:01
அண்மைச் செய்திகள்
ரோசரி மணியால் கண்ணில் அடிபட்ட போப்பாண்டவர், மன்னிப்பு வழங்கினார்! உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்? ‘போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ – இந்திய பிரதமர் வலியுறுத்து ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கசிவுகள் – சுற்றுச்சூழல் அபாயம் குறித்து எச்சரிக்கை ‘ஈரானுடன் இன்று சந்திப்பு நடைபெறும்’ – கட்டார் அதிகாரி தெரிவிப்பு சிலாபத்தில் கோர விபத்து! ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயம் யாழில் சிறீதரன் எம்.பியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய தொல்.திருமாவளவன்! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் – அவசர மருத்துவ சிகிச்சை கோரும் இம்ரான் கான்! தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு! மும்பை வீதியில் கிரிக்கெட் விளையாடி அசத்திய பிரித்தானிய இளவரசர் தம்பதி!
விளம்பரம்விளம்பரம்
சினிமா பிளஸ்

தனுஷ் – அனிருத் நட்பில் என்னதான் நடந்தது? மீண்டும் பேசுபொருளான பழைய விரிசல்!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் அண்மையில் க்ரீஸ் நாட்டில் நடைபெற்றதாகவும், எதிர்வரும் 21ஆம் திகதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட நிலையில், அனிருத்தின் நெருங்கிய நண்பரும் ஆரம்பகால இசைப் பயணத்தில் முக்கியப் பங்காற்றியவருமான நடிகர் தனுஷ் கலந்துகொள்ளாதது பேசுபொருளாகியுள்ளது.

தனுஷுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இருவருக்கும் இடையிலான நீண்டகால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2017ஆம் ஆண்டு வெளியான சுச்சி லீக்ஸ் சர்ச்சைக்குப் பின்னரே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர், தனுஷ் மற்றும் அனிருத் இடையிலான பிரிவுக்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான ‘வை திஸ் கொலவெறி’ பாடல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதைச் சுட்டிக்காட்டும் திரைத்துறை விமர்சகர்கள், இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.