Monday, 23 November 2026
கனடா வானிலை
6°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 3°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 13 km/h
  • ஸ்காபரோ 6°
  • மார்க்கம் 6°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 6°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 09:18
அண்மைச் செய்திகள்
யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மின்மினிப் பூச்சி! அம்மா உணவகத்தில் வாலிபர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் கைது பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கை கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கை

சந்தையில் செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை எதிர்காலத்தில் 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் சந்தையில் செத்தல் மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 120 செத்தல் மிளகாய் கொள்கலன்கள் சுங்கக் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களால் தேவையான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு, சுங்கக் கட்டணங்கள் உள்ளிட்ட உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டு, பரிசோதனை நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தரம் தொடர்பான பிரச்சினை காரணமாகவே இந்தக் கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் உள்ளதாக அவர் கூறினார்.

முன்னர் சுமார் 1,050 ரூபாவாகக் காணப்பட்ட செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் விலை, தற்போது சுமார் 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பி. சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த விலை மேலும் அதிகரித்து 2,500 ரூபா எல்லையைத் தாண்டக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலைமையானது, மிளகாய்த்தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாகப் பல தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வர்த்தகர்களுக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, சுங்கப் பொறுப்பிலுள்ள செத்தல் மிளகாய் தொகைகளை விடுவிப்பதற்குத் தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்பத் துரித பொறிமுறையொன்றைத் தயாரித்துத் தருமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.