இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மரன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் கலந்துகொண்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதுமணத் தம்பதியுடன் சங்கீதா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
மஞ்சள் நிற ஆடையுடன் சங்கீதா இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையில், குறித்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும் முதலமைச்சர் விஜயுடன் இணைந்தே வந்திருக்கலாம் என இணையவாசிகள் தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் கடந்த நவம்பர் 11ஆம் திகதி கிரேக்கத்தில் எளிமையான சுயமரியாதைத் திருமண முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் திரையுலகம், கிரிக்கெட், அரசியல் மற்றும் வர்த்தகத் துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




