Sunday, 22 November 2026
கனடா வானிலை
6°C
ரொறன்ரோ
பகுதி மேகமூட்டம்
  • உணர்வு 4°
  • ஈரப்பதம் 96%
  • காற்று 8 km/h
  • ஸ்காபரோ 7°
  • மார்க்கம் 8°
  • பிரம்டன் 7°
  • மிசிசாகா 5°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.06%
  • EUR 1.57 ▼ 0.01%
  • GBP 1.88 ▼ 0.09%
  • CHF 1.71 ▲ 0.40%
  • AUD 0.95 ▼ 0.44%
  • 1 CAD → LKR 232.22 ▼ 0.03%
  • 1 CAD → INR 64.82 ▼ 0.54%
  • AED 0.39 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-22 13:31
அண்மைச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது-பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம் கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது கனடாவில் 2 இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொலை அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம் நிறைவு! பிறந்தநாள் பலன்கள்
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், நச்சுத்தன்மை கொண்டதாகக் கருதப்படும் மதுபானத்தை அருந்தியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மதுபானத்தை அருந்தியவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக, அம்மாநில முதலமைச்சர் யுங்னம் கெம்சந்த் சிங் வெள்ளிக்கிழமை (20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுவரை 180க்கும் மேற்பட்ட நோயாளிகள் இரண்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் சட்டவிரோதமான அல்லது கலப்படம் செய்யப்பட்ட மதுவை அருந்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அவ்வப்போது பதிவாகின்றன. முறைப்படுத்தப்படாத வழிகளில் விற்கப்படும் மலிவான மதுபானங்களில், மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தொழில்துறை வேதிப்பொருளான மெத்தனால் கலந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே மற்றும் அருகிலுள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதிகளில், கடந்த மே மாதம் மெத்தனால் கலந்த சட்டவிரோத மதுவை அருந்தியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில், கடந்த ஒகஸ்ட் மாதம் மெத்தனால் கலந்த மதுவை அருந்தியதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.