Sunday, 22 November 2026
கனடா வானிலை
13°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 7 km/h
  • ஸ்காபரோ 13°
  • மார்க்கம் 14°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 11°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.06%
  • EUR 1.57 ▼ 0.01%
  • GBP 1.88 ▼ 0.09%
  • CHF 1.71 ▲ 0.40%
  • AUD 0.95 ▼ 0.44%
  • 1 CAD → LKR 232.22 ▼ 0.03%
  • 1 CAD → INR 64.82 ▼ 0.54%
  • AED 0.39 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-22 20:10
அண்மைச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது-பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம் கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது கனடாவில் 2 இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொலை அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம் நிறைவு! பிறந்தநாள் பலன்கள்
விளம்பரம்விளம்பரம்
ஜோதிடம் ஷ்பெசல்

பிறந்தநாள் பலன்கள்

1, 10, 19, 28

19.11.2026 முதல் 25.11.2026 வரை

முயற்சிகளினால் வெற்றி பெறும் ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதூரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.

2, 11, 20, 29

19.11.2026 முதல் 25.11.2026 வரை

தலைமை தாங்கி துணிச்சலுடன் எதையும் செய்யும் இரண்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் சுபச்செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்னை தீரும்.

3, 12, 21, 30

19.11.2026 முதல் 25.11.2026 வரை

எதிலும் சாமர்த்தியமாக செயல்படும் மூன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டுக் கட்டைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

4, 13, 22, 31

காரியம் சாதிக்க பலவகையான யோசனைகளையும் கையாள்வதில் கெட்டிக்காரர்களான நான்காம் எண் அன்பர்களே, இந்த வாரம் காரிய அனுகூலம் ஏற்படும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு மனதிருப்தியை தரும். அரசியல்துறையினருக்கு நிதி நிலைமை  சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.

5, 14, 23

19.11.2026 முதல் 25.11.2026 வரை

தான் எடுத்துக் கொண்ட காரியங்களை திறம்பட செய்யும் ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். பணவரத்தை அதிகப்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும்.

பரிகாரம்: அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

6, 15, 24

19.11.2026 முதல் 25.11.2026 வரை

தனித்தன்மையுடன் செயல்படும் ஆறாம் எண் அன்பர்களே, இந்த வாரம் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

பரிகாரம்: சிவனை வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும்.

7, 16, 25

19.11.2026 முதல் 25.11.2026 வரை

எளிதில் யாரையும் நம்பாத ஏழாம் எண் அன்பர்களே, இந்த வாரம் பணவரவு அதிகமாகும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். பெண்களுக்கு எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

பரிகாரம்: காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும்.

8, 17, 26

19.11.2026 முதல் 25.11.2026 வரை

நியாயமும் நேர்மையும் நிர்வாகத் திறனும் கொண்ட எட்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னை உண்டாகலாம். அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.


9, 18, 27

19.11.2026 முதல் 25.11.2026 வரை

அத்யாவசிய செலவுகளை மட்டுமே செய்யும் ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தொழிலில் போட்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: விநாயகரை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.