Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
ஜோதிடம் ஷ்பெசல்

இன்றைய ராசிபலன் – நவம்பர் 21, 2026 சனி

பஞ்சாங்கம்

நாள்சனிக்கிழமை
திதிதுவாதசி
நட்சத்திரம்ரேவதி
யோகம்மரணயோகம்
ராகுகாலம்காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம்பகல் 1.30 முதல் 3 வரை
நல்லநேரம்காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 12.15 முதல் 1.15 வரை
சந்திராஷ்டமம்பூரம்
சூலம்கிழக்கு
பரிகாரம்தயிர்

மேஷம் ராசி பலன்


மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வீடு, நிதி நிலை தொடர்பாக எளிய திட்டங்கள் உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க உதவும். நீங்கள் இலக்கு நிர்ணயித்து செய்யக் கூடிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும். என்று ஞாபகங்கள் அதிகரிக்க கூடிய நாள். புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். நிதி விவகாரங்கள், நீண்டகால முதலீடுகள், குறுகிய பயணங்கள் மற்றும் திட்டமிடல் தொடர்பான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். ஆன்மீகச் சிந்தனைகள் மற்றும் உயர்கல்வி தொடர்பான மாற்றங்கள் ஏற்படலாம்.


ரிஷபம் ராசி பலன்


​ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் சொந்த ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவுப் பழக்கத்தில் தகுந்த முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். சிரமத்துடன் ஒத்திவைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்ற கூட்டாளியின் ஒத்துழைப்பு நாடப்படும். தொடர்பும் படைப்பாற்றலும் பயனுள்ளதாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்திலும், வீட்டில் அமைதியான சூழலைப் பேணுவதிலும் கவனம் செலுத்துங்கள்.புத்திசாலித்தனமான திட்டமிடல் உங்கள் நிலை தொடர்பாக நன்மை தரக்கூடியதாக இருக்கும். நடைமுறைக்கு சாத்தியமான முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்தவும்.


மிதுனம் ராசி பலன்


மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் செலவுகள் அதிகரிக்கக்கூடும். கண் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சால் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வார்த்தைகளிலும் தொடர்பிலும் கவனம் தேவை.நிதி ரீதியான நன்மைகள். உங்கள் வார்த்தைகளின் மதிப்பு அதிகரிக்கும். குடும்பம் மற்றும் பணி தொடர்பாக சமநிலையை கடைபிடிக்கவும். உங்கள் வேலை தொடர்பாக தாமதத்தையும், சில குழப்பமும் ஏற்படலாம்.


கடகம் ராசி பலன்


கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஊடகங்களில் தொடர்புகள் உருவாக்கப்படும், சிறுவயது நண்பர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெறும், எதிர்பார்க்கப்படும் முடிவுகள் நன்மை தரும். தொழில் மற்றும் குடும்பப் பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படும். மிகுந்த கடின உழைப்பிற்குப் பிறகு செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்பாடுகளால் சீரான முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். உங்கள் பணிகளை முடிப்பதில் எளிமையான திட்டங்கள் நன்மை தரும். உங்கள் வாக்குறுதிகளை காப்பாற்ற சிரமப்படுவீர்கள். பிறரின் ஆலோசனைகளை கவனமாக சிந்தித்து ஏற்றுக் கொள்ளவும்.


சிம்மம் ராசி பலன்


சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நிதி விஷயங்களில் திடீர் தாமதம் ஏற்படும். தகவல் தொடர்பில் முன்னெச்சரிக்கை தேவை. அசையாச் சொத்து விஷயங்களில் சில முடிவுகள் எடுக்கப்படும். குழந்தைகளுடனான முக்கியமான உரையாடல்களின் போது தன்னம்பிக்கையுடனும் நிதானத்துடனும் செயல்படுங்கள். நிதிநிலை ரீதியாக சிறப்பானதாக அமையும். உங்களுடைய உறவுகள் மற்றும் வேலை தொடர்பாக நன்மை அடைய நிதானமும், சிந்தனைமிக்க செயல்படும் தேவை. என்று உங்களுடைய தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.


கன்னி ராசி பலன்


​கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படும். சொத்து தொடர்பான விஷயங்கள், தேக்கமடைந்த பணிகள், இல்லற வசதிகள், உடன்பிறப்புகளுடனான உரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கலவையான பலன்கள் கிடைக்கும்.தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி தரும். காதல் வாழ்க்கையில் சிக்கல்களை தீர்க்க இனிய பேச்சும், புரிதலும் தேவை. முதலீடு மற்றும் முடிவுகள் எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். உங்களின் கடின உழைப்பு மற்றும் நேர்மையான செயல்பாட்டுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.


துலாம் ராசி பலன்


துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உறவினர்களுடனான கலந்துரையாடல்களில் நிதானம் அவசியம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் வாக்குவாதங்கள் இன்றி முன்னேற வேண்டும். உங்களுக்கு பெரிய நிதி சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் நிலைமை சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் உங்களுடைய இனிய பேச்சு உங்கள் காதலை அதிகரிக்கும். தொழில் விஷயங்களில் வாழ்க்கையில் கூடுதல் நன்மைகள் பெறுவீர்கள். குடும்பத்தினரின் மூலம் ஆதரவு கிடைக்கக்கூடிய நாள்.


விருச்சிகம் ராசி பலன்


விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தான தருமங்களில் கவனம் செலுத்துங்கள். நிதி மற்றும் குடும்ப விவகாரங்களில் மன அமைதியைப் பேண வேண்டும். மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் சூழல் அமையும். உங்களுடைய நிதி நிலையம் ஆரோக்கியமும் முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய உறவு பிரச்சனை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் சில நாட்களாக சந்தித்து வந்த கவன சிதறல் நீங்கும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.


தனுசு ராசி பலன்


தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பப் பெரியவர்களின் உடல்நலத்தைப் பேண வேண்டும் மற்றும் நிதி விஷயங்களில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட உடல்நலப் பராமரிப்பு, குறிப்பாக கண் பராமரிப்பு அவசியம். காதல் விஷயத்தில் உற்சாகமான நாளாக இருக்கும். தொழில் தொடர்பான வாழ்க்கையில் காட்டும் ஈடுபாடு நன்மை அளிக்கும் விதமாக இருக்கும். உங்களுடைய முதலீடு அல்லது பங்கு சந்தை தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கும்.


மகரம் ராசி பலன்


​மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் சொந்த ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம்; அன்றாட வாழ்க்கை முறையைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள். ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். இன்று உங்களுடைய நிதானமான சிந்தனை மற்றும் செயல்பாடு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். காதல் விஷயத்தை உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் காதலியை அல்லது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.


கும்பம் ராசி பலன்


கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று துணைவரின் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். இல்லறச் சூழலில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். புதிய முதலீடுகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகச் செலவுகள் செய்ய நேரிடலாம். தூக்கமின்மை, திடீர் பயணங்கள் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டும். முதலீடு அல்லது பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய படைப்பாற்றல் மேம்படக்கூடிய நாள். தொழில் வாழ்க்கையில் பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள்.


மீனம் ராசி பலன்


மீன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் மோதல்களைத் தவிர்த்து, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், திடீர்ச் செலவுகளைக் கையாள்வதிலும் கவனம் தேவை. குடும்பத்தினர், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் பேசும்போது தகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். இன்று உங்கள் பேச்சில் காட்டும் இனிமை, செயலில் காட்டும் நிதானம் நற்பலனை பெற உதவும். எதிர்பார்த்த நன்மை பெற சரியான திட்டமிடல் தேவைப்படும். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கக்கூடிய நாள். அதனால் புதிய முயற்சிகள், முதலீடுகளை தவிர்க்கவும்.