Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர்

2026 ஆம் ஆண்டில் அதிக நன்கொடை வழங்கிய இந்தியர்களின் பட்டியலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் ரூ.2,593 கோடி நன்கொடை வழங்கி முதலிடம் பிடித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை Hurun india வெளியிட்டுள்ளது.

இதில், தொடர்ந்து 5வது ஆண்டாக HCL நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். 

ஷிவ் நாடார், 2025 – 2026 நிதியாண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். அதாவது சாரிசாரியாக நாளொன்றுக்கு ரூ.7.1 கோடி வழங்கியுள்ளார். ஷிவ் நாடார் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.

கடந்த ஆண்டு ரூ.491 கோடி நன்கொடை வழங்கியிருந்த கௌதம் அதானி, இந்த ஆண்டில் ரூ.877 கோடி வழங்கி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பஜாஜ் குடும்பம் ரூ.632 கோடியுடன் 3வது இடத்திலும், முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.620 கோடிகளுடன் 4வது இடத்திலும், நந்தன் நிலேகனி ரூ. 380 கோடியுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

ரூ.215 கோடி நன்கொடை வழங்கி அதிக நன்கொடை வழங்கிய பெண்கள் பட்டியலில், 67 வயதான ரோகிணி நிலேகனி முதலிடம் பிடித்துள்ளார். பெண் கொடையாளிகளின் எண்ணிக்கை 24 லிருந்து 29ஆக அதிகரித்துள்ளது. 

ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் | Shiv Nadar Tops In India Philanthropy List Fy26

ரூ.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர் நன்கொடைகளின்படி, 219 நன்கொடையாளர்கள், ரூ.11,554 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட ரூ.10,380 கோடியை விட 11% அதிகமாகும்.

இந்தப் பட்டியலில் உள்ள கொடையாளர்களின் எண்ணிக்கை 192 லிருந்து 219 ஆக உயர்ந்துள்ளது. இதில், 19 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளனர். அதே நேரத்தில் புதியவர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 45 ஆக அதிகரித்துள்ளது.

கொடையாளர்களின் எண்ணிக்கையில், மும்பை 64 பேருடன் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. நன்கொடை மதிப்பின் அடிப்படையில் டெல்லி ரூ.3,168 கோடியுடன் முதலிடம் பிடித்தது.

அதிகபட்சமாக கல்வித்துறைக்கு ரூ. 4,188 கோடி கிடைத்துள்ளது, இது மொத்த நன்கொடைகளில் 36% ஆகும்.