Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நாடு திரும்பும் வேலையில் இறங்கியதே, அங்கு போராட்டங்களும் வன்முறைகளும் வெடிப்பதற்கு முக்கிய காரணம். கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்காக தமக்கு புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கக்கோரி, இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்தை அணுகினார்.

ஆனால், ஷேக் ஹசீனாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வங்கதேச அரசு திட்டவட்டமாக மறுத்தது. அதோடு, அவரை நாடு கடத்தவேண்டும் என்றும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. இதனால் கொந்தளித்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர், நாடு தழுவிய போராட்டத்தில் குதித்தனர். பதிலுக்கு ஆளுங் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட பல இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, வங்கதேச இடைக்கால அரசின் முன்னாள் தலைவர் முகமது யூனுஸின் பூர்வீக வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.