Monday, 23 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 2°
  • ஈரப்பதம் 82%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 6°
  • மார்க்கம் 6°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 6°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 09:18
அண்மைச் செய்திகள்
காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்! யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மின்மினிப் பூச்சி! அம்மா உணவகத்தில் வாலிபர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் கைது பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்!

லிபியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ரஷ்யாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்றை ஆளில்லா கடற்படை ட்ரோன் தாக்குதல் மூலம் மூழ்கடித்ததாக யுக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கையின்போது, அந்த நாட்டுக்குச் சொந்தமான ‘மெர்குரி’ (Merkury) என்ற போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

லிபியக் கரையோரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு யுக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஏழு கடற்படை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் நவீன போர்க்கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும் மெர்குரி கப்பல் மீதான தாக்குதலில், KA-27 ரக உலங்கு வானூர்தி ஒன்றும் அழிக்கப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யா ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் MV Angara என்ற சரக்குக் கப்பல் மீதும் யுக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கப்பல் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதை அந்த நாட்டின் கிழக்குப் பகுதி நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லிபியாவின் கிழக்கு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த ட்ரோன் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

லிபியா வெளிநாட்டு மோதல்களுக்கான போர்க்களமாக மாற்றப்படக்கூடாது என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பதிலளிக்கும் வகையில், கடற்பரப்புகளில் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், உள்நாட்டு ஆயுத உற்பத்தியை மேலும் மேம்படுத்தவுள்ளதாகவும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.