Tuesday, 24 November 2026
கனடா வானிலை
-3°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 87%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ -2°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -2°
  • மிசிசாகா -1°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.44 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.34%
  • GBP 1.87 ▼ 0.20%
  • CHF 1.71 ▲ 0.08%
  • AUD 0.95 ▼ 0.00%
  • 1 CAD → LKR 231.50 ▼ 0.24%
  • 1 CAD → INR 64.71 ▲ 0.09%
  • AED 0.39 ▲ 0.19%
புதுப்பிப்பு: 2026-11-24 11:42
அண்மைச் செய்திகள்
ஹிஜாப் இல்லாத இசை நிகழ்ச்சி – ஈரானிய பாடகிக்கு கிடைத்த அதிர்ச்சித் தண்டனை! மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு! இஸ்ரேலியர்களுக்கு இலவச விசா – நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தா? நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை! ஜெயிலர் 3′ படத்தில் மதிமலர்? ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறாரா? நவம்பர் 26, 27ஆம் திகதிகளில் அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்! ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! சதாம் உசைன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் ஏலத்திற்கு..! ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை – பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல் காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், மலை ஏற்றத்தின்போது தவறி வீழ்ந்த தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை ஒருவர் சுமார் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் அமைந்துள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் உள்ள மவுண்ட் பேடன் பவல் (Mount Baden-Powell) மலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மலையில் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி காரணமாக வழுக்கும் நிலையில் காணப்பட்ட பகுதியில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரது மகன் தவறி விழுந்துள்ளார்.

இதன்போது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் நிலைதடுமாறி சுமார் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கில்லர்மோ அலெஜான்ட்ரோ பட்ரெஸ் (Guillermo Alejandro Batres) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும், மலையேற்ற வீரராகவும் இருந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகள் மற்றும் குடும்பத்தின் ஏனைய நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 12,000 அமெரிக்க டொலர்களைத் திரட்டும் நிதி சேகரிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 9,350 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குளிர்காலத்தில் மவுண்ட் பேடன் பவல் மலையில் பனியும் பனிக்கட்டிகளும் அதிகளவில் படிவதால், அங்கு மலையேற்றத்தில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானதாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.