Tuesday, 24 November 2026
கனடா வானிலை
-3°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 87%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ -2°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -2°
  • மிசிசாகா -1°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.44 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.34%
  • GBP 1.87 ▼ 0.20%
  • CHF 1.71 ▲ 0.08%
  • AUD 0.95 ▼ 0.00%
  • 1 CAD → LKR 231.50 ▼ 0.24%
  • 1 CAD → INR 64.71 ▲ 0.09%
  • AED 0.39 ▲ 0.19%
புதுப்பிப்பு: 2026-11-24 11:42
அண்மைச் செய்திகள்
ஹிஜாப் இல்லாத இசை நிகழ்ச்சி – ஈரானிய பாடகிக்கு கிடைத்த அதிர்ச்சித் தண்டனை! மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு! இஸ்ரேலியர்களுக்கு இலவச விசா – நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தா? நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை! ஜெயிலர் 3′ படத்தில் மதிமலர்? ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறாரா? நவம்பர் 26, 27ஆம் திகதிகளில் அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்! ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! சதாம் உசைன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் ஏலத்திற்கு..! ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை – பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல் காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

ஹிஜாப் இல்லாத இசை நிகழ்ச்சி – ஈரானிய பாடகிக்கு கிடைத்த அதிர்ச்சித் தண்டனை!

ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஈரானிய பாடகி ஒருவருக்கு 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
29 வயதான பரஸ்தூ அஹ்மதி (Parastoo Ahmadi) என்ற பாடகிக்குக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இசை நிகழ்ச்சியின்போது, ஹிஜாப் அணியாமல் பாடல்களைப் பாடியமை தொடர்பில் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப்பாதைக்கு அருகிலுள்ள ஈரானின் டெய்ர் கச்சின் (Deyr Gachin) பகுதியில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்ச்சியில் நேரடிப் பார்வையாளர்கள் எவரும் கலந்துகொள்ளாத போதிலும், அதன் காணொளி சுமார் 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிகழ்ச்சியின்போது கைகளற்ற ஆடையணிந்து, ஹிஜாப் அணியாமல் அவர் பாடல்களைப் பாடியிருந்தார்.

ஒழுக்கத்திற்கு முரணான உள்ளடக்கங்களைத் தயாரித்து இணையத்தில் வெளியிட்டதன் மூலம் பொதுமக்களின் ஒழுக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, கடந்த ஜூன் மாதம் ஈரானின் கொம் நகர குற்றவியல் நீதிமன்றம் குறித்த பாடகி உள்ளிட்ட ஒன்பது பேரைக் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது.

இதற்கு எதிராக அவரது சட்டத்தரணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் தாக்கல் செய்த மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி பாடகிக்கு எதிரான 74 கசையடிகள் தண்டனை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் மூன்று இசைக் கலைஞர்களுக்கும், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருக்கும் கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஐவருக்கும் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணத் தடையும், இரண்டு ஆண்டுகள் கலைத்துறையில் ஈடுபடுவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.