Tuesday, 24 November 2026
கனடா வானிலை
-3°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 87%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ -2°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -2°
  • மிசிசாகா -1°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.44 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.34%
  • GBP 1.87 ▼ 0.20%
  • CHF 1.71 ▲ 0.08%
  • AUD 0.95 ▼ 0.00%
  • 1 CAD → LKR 231.50 ▼ 0.24%
  • 1 CAD → INR 64.71 ▲ 0.09%
  • AED 0.39 ▲ 0.19%
புதுப்பிப்பு: 2026-11-24 11:42
அண்மைச் செய்திகள்
ஹிஜாப் இல்லாத இசை நிகழ்ச்சி – ஈரானிய பாடகிக்கு கிடைத்த அதிர்ச்சித் தண்டனை! மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு! இஸ்ரேலியர்களுக்கு இலவச விசா – நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தா? நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை! ஜெயிலர் 3′ படத்தில் மதிமலர்? ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறாரா? நவம்பர் 26, 27ஆம் திகதிகளில் அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்! ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! சதாம் உசைன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் ஏலத்திற்கு..! ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை – பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல் காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்!
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

இஸ்ரேலியர்களுக்கு இலவச விசா – நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தா? நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை!

இஸ்ரேலியர்களின் செயற்பாடுகளுக்கும் மொசாட் உளவுப் பிரிவினருக்கும் இலங்கையில் இடமளிப்பது தேசிய பாதுகாப்பு, நாட்டின் எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையின் இலவச விசா திட்டத்தில் இஸ்ரேல் ஏன் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும், கொழும்பு 7இல் அமைந்துள்ள சபாத் இல்லம் (Chabad House) ஏன் இதுவரை மூடப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த சபாத் இல்லம் சட்டவிரோதமானது என முன்னர் பிரதமரால் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலியப் பிரஜைகளுக்கு இணையவழி ஊடாக இலவச விசா வழங்கும் தீர்மானத்தையும் விமர்சித்த அவர், பலஸ்தீனத்தில் சுமார் 20,000 சிறுவர்கள் உள்ளிட்ட 75,000 பேர் உயிரிழந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்படும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பல இஸ்ரேலுடனான உறவுகளைக் குறைத்து வரும் நிலையில், இஸ்ரேல் அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொழும்பு 7இல் சினமன் விடுதிக்கு எதிரே அமைந்துள்ள சபாத் இல்லத்திற்கு விசேட அதிரடிப்படையினருக்குப் பதிலாக தற்போது காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கம் இஸ்ரேலுக்கு இலங்கையில் அதிகளவிலான செயற்பாட்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய முஜிபுர் ரஹ்மான், இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.