Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-2°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -6°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -4°
  • மிசிசாகா -3°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா நிறுவனத்தின் தலைமைச் நிறைவேற்று அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

ஆனால், பல ஆண்டுகளாகத் தனது தனித்துவ அடையாளமாக அணிந்து வந்த கருப்பு நிற லெதர் கோட்டை இம்முறை அவர் தவிர்த்திருப்பது தொழில்நுட்ப மற்றும் பேஷன் உலகில் பேசுபொருளாகியுள்ளது.

நிறுவன ஊழியர்கள் மற்றும் சீன உளவாளி என அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து நவம்பர் 12-ம் திகதி ஜென்சன் ஹுவாங் தனது CEO பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தலைமைத்துவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், என்விடியா நிர்வாகக் குழுவின் ஒருமனதான முடிவின்படி, நவம்பர் 23-ம் திகதி திங்கட்கிழமை அவர் மீண்டும் நிறுவனத்தின் தலைவர் CEO மற்றும் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் கருப்பு டர்டில்நெக் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சாம்பல் நிற டி-ஷர்ட் போல, 63 வயதான ஜென்சன் ஹுவாங்கிற்கு கருப்பு நிற லெதர் கோட் மிகப்பெரிய அடையாளமாக இருந்தது.

ஆனால், திங்கட்கிழமை அமெரிக்காவின் சான்டா கிளாராவில் உள்ள என்விடியா தலைமையகத்திற்குத் திரும்பியபோது அவர் லெதர் கோட்டுக்கு பதிலாக மிகவும் எளிமையான நேவி ப்ளூ நிற டியோர் ஜிப் வைத்த காட்டன் சட்டை கருப்பு பேண்ட் மற்றும் ஸ்னீக்கர்ஸ் அணிந்திருந்தார்.

உடை மாற்றத்திற்கான காரணம் என்ன?

சமீபத்திய சர்ச்சைகளுக்குப் பிறகு ஹுவாங்கின் அடையாளமாக இருந்த லெதர் கோட்டை இணையவாசிகள் ‘நடுத்தர வயது நெருக்கடியின் வெளிப்பாடு’ எனக் கேலி செய்யத் தொடங்கியிருந்தனர்.

அந்தச் சர்ச்சையான பிம்பத்திலிருந்து விலகி ஒரு புதிய தொடக்கத்தைக் காட்டவே அவர் இந்த உடை மாற்றத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என வடிவமைப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட ஹுவாங்

தலைமையகத்திற்குத் திரும்பிய ஜென்சன் ஹுவாங்கை ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது பேசிய அவர் தனக்கு இரண்டாவது வாய்ப்பு அளித்ததற்காக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இந்தச் சூழ்நிலைக்கு ஆளாக்கியதற்காக மன்னிப்பும் கோரினார்.