GTA 6 (Grand Theft Auto VI) காணொளி விளையாட்டை விளையாடுவதற்காக ஊழியர் ஒருவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் மேலதிக விடுமுறை நாளொன்றை வழங்க அமெரிக்க நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்ட ஆடம்பர ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரயன் செர்ஹான்ட் (Ryan Serhant) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
GTA 6 விளையாடுவதற்காக ஒருநாள் விடுமுறை கோரி ஊழியர் ஒருவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பான காணொளி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ Instagram கணக்கில் வெளியிடப்பட்டது.
குறித்த காணொளிக்கு கிடைக்கும் விருப்பங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி 1.6 மில்லியனை எட்டினால், அனைத்து ஊழியர்களுக்கும் மேலதிக விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, காணொளி 1.6 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் மேலதிக விடுமுறை நாளொன்றை வழங்க தலைமை நிர்வாக அதிகாரி தீர்மானித்துள்ளார்.
மேலும், குறித்த Instagram காணொளி 23 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




