இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வீரேந்திர சேவாக்கின் மகனான ஆர்யவீர் சேவாக், ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலத்தில் இடம்பெறவுள்ள வீரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஆர்யவீர் சேவாக், தனது அடிப்படை ஏல விலையை 30 இலட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் தனது சிறப்பான துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்திய ஆர்யவீர், மொத்தமாக 361 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதன் மூலம் குறித்த தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்ததுடன், தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் (தொடர் நாயகன்) தனதாக்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திர வீரரான வீரேந்திர சேவாக்கின் மகன் என்பதைக் கடந்து, தனது துடுப்பாட்டத் திறமையால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஆர்யவீர் சேவாக், தற்போது ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




