Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-4°C
ரொறன்ரோ
பகுதி மேகமூட்டம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 69%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -8°
  • பிரம்டன் -5°
  • மிசிசாகா -4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்!

கோவாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் முக்கிய நபராக இருந்த அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் nfமரூன் பான்கிராப்ட் ஆகியோர் டிசம்பர் 16-ஆம் திகதி ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ள குறிப்பிடத்தக்க வெளிநாட்டு வீரர்களில் அடங்குவர்.

நடப்பாண்டின் ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ்இ கடைசியாக 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார். அவர் இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தற்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

35 வயதான ஸ்டோக்ஸ் இந்த மினி ஏலத்திற்கு கூடுதல் ஈர்ப்பைச் சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்திற்கு பதிவு செய்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பந்து சேதப்படுத்திய சர்ச்சையில் தனது பங்களிப்பு குறித்து சமீபத்தில் விளக்கம் அளித்த பேட் கம்மின்ஸின் கருத்துகளுக்கு பதிலளித்த பான்கிராப்ட் 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் பங்கேற்கிறார். 34 வயதான அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியதில்லை ஆனால் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்டும் ஏலத்தில் பங்கேற்கிறார்இ ஆனால் அவர் இந்த தொடரின் பெரும்பகுதிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

பங்களாதேஷ் அணியில் 11 வீரர்கள் ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர் ஆனால் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இதில் இடம்பெறவில்லை. 

கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ.-யின் அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்தது. இந்த நிகழ்வு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இருந்து வங்கதேசம் விலகுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

பதிவு செய்துள்ள வங்கதேச வீரர்கள்:

ஹசன் மஹ்மூத் பர்வேஸ் ஹொசைன் எமோன் ரிபன் மொண்டோல் ரிஷாத் ஹொசைன் சைப் ஹசன் ஷாக் மஹேதி ஹசன் ஷமீம் ஹொசைன் ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சகிப்இ தவ்ஹித் ஹிரிடோய் மற்றும் முகமது ரூபெல்.

இணைப்பு நாடுகளை சேர்ந்த வீரர்களில் ஜப்பானை சேர்ந்த பெஞ்சமின் இடோ டேவிஸும் கோவாவில் நடைபெறவுள்ள ஏலத்தில் இடம்பெறலாம். இவரது அடிப்படை விலை 30 லட்சம் ரூபாய் ஆகும். ஏல பட்டியலில் மொத்தம் 1220 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்; இதில் 939 இந்திய வீரர்களும் 281 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.

184 வீரர்கள் தக்க வைப்பு:

மொத்தம் 66 இடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதில் 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானவை. ஏலத்திற்கு முன்பாக இந்த பட்டியல் கணிசமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பட்டியலில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் 184 பேரும் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள் 994 பேரும்இ அசோசியேட் நாடுகளை சேர்ந்த வீரர்கள் 42 பேரும் உள்ளனர்.