Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-3°C
ரொறன்ரோ
பகுதி மேகமூட்டம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -8°
  • பிரம்டன் -5°
  • மிசிசாகா -4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 09:12
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை!

இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை வன்முறை வழிகளில் மீள உருவாக்குவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜையான முஹம்மது அஸ்மின் என்பவருக்குக் கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வழக்கின் பின்னணி: 

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கும் சர்வதேசக் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து, விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கச் சதி செய்ததாக அஸ்மின் மீது என்.ஐ.ஏ குற்றம் சாட்டியுள்ளது. 

சென்னை கடற்கரைப் பகுதிகள் மற்றும் திருச்சி தடுப்பு முகாம்களில் இதற்கான இரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள், ஏ.கே-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 1,000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சதித்திட்டம் அம்பலமாகியதுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதாகவும், ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சி ஊடாகப் பணப் பரிமாற்றம் செய்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிணை வழங்கப்பட்டமைக்கான காரணம்: 

இந்த வழக்கில் இந்திய தேசிய புலனாய்வு முகவரத்தின் விசேட நீதிமன்றம், அஸ்மினுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளதோடு, அவர் அரசாங்கத் தரப்பு சாட்சியாக மாறி விசாரணைக்கு ஒத்துழைக்கவும் சம்மதித்துள்ளார்.