Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-2°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -6°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -4°
  • மிசிசாகா -3°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

கனேடிய தம்பதியர் கொலை வழக்கில் அமெரிக்கர்கள் இருவருக்கு தண்டனை

டொமினிக்கா நாட்டில், கனேடிய தம்பதியை கொலை செய்த வழக்கில் அமெரிக்கர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

டொமினிக்கா என்னும் கரீபியன் தீவில் கனேடிய தம்பதியரான டேனியல் (Daniel Langlois) மற்றும் டொமினிக்குக்கு (Dominique Marchand) சொந்தமாக ஒரு ரிசார்ட் உள்ளது. 

அந்த ரிசார்ட்டுக்குச் செல்லும் பாதை தொடர்பில் தம்பதியருக்கும் ஜோனத்தன் (Jonathan Lehrer) என்பவருக்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்துவந்துள்ளது.

அதாவது, டேனியலின் ரிசார்ட்டில் தங்க வருபவர்கள், ஜோனத்தன் வீட்டின் முன் உள்ள ஒரு பாதையை பயன்படுத்தித்தான் டேனியலின் ரிசார்ட்டை அடையமுடியும்.

ஆனால், தன் வீட்டின் முன் உள்ள பாதையை பயன்படுத்தக்கூடாது என்று கூறிய ஜோனத்தன், அந்த பாதையை அவ்வப்போது கற்களைப் போட்டு மறித்துவிடுவாராம்.

ஆகவே, டேனியல் நீதிமன்றத்தை நாட, அந்தப் பாதை பொதுவான பாதை, அதை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், டேனியல் தம்பதியர் திடீரென மாயமாக, அவர்களை தேடிவந்த பொலிசார் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி, கார் ஒன்றிற்குள் எரிந்த நிலையில் கண்டுபிடித்தார்கள். 

கனேடிய தம்பதியர் கொலை வழக்கில் அமெரிக்கர்கள் இருவருக்கு தண்டனை | 2 American Get Life Sentence Kill Canada Couple

அதைத் தொடர்ந்து, ஜோனத்தன் பழைய பகையை மனதில் வைத்து, ராபர்ட் (Robert Thomas Snyder Jr.) என்பவருடன் சேர்ந்து டேனியலையும் அவரது மனைவியான டொமினிக்கையும் காருக்குள் வைத்து தீவைத்துக் கொளுத்திக் கொன்றுவிட்டதாக அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தார்கள்.

இந்நிலையில், அமெரிக்கர்களான ஜோனத்தன் மற்றும் ராபர்ட் இருவருக்கும் தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், கொல்லப்பட்ட டேனியல் (Daniel Langlois), ஜுராஸிக் பார்க் முதலான பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட 3D அனிமேஷன் தொழில் நுட்பத்தை உருவாக்கிய, Softimage என்னும் கனேடிய நிறுவனத்தை நிறுவியவர் ஆவார்.