தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை மக்களுக்கு ஏற்படும். இந்தப் பொருளாதாரம் இப்படியே போனால் நிச்சயமாகக் கொண்டாடவே முடியாது. இது நிச்சயமாக நடக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
மக்கள் சார்ந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்த அவரின் கருத்து
புத்தாண்டில் சம்பிரதாயப்படி விளக்கேற்றி உறவினர்களை வரச்சொல்லி உணவு கொடுத்து வெடி கொளுத்த எதுவுமே செய்யக் கிடைக்காது.
இந்த நாட்டின் இந்தப் பொருளாதாரத்தில் அதாவது சந்தையில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் மாற்றம் வேறுபடும்.
மத்திய வங்கியின் தலைவர் சொல்லுகிறார் ‘நீங்கள் தயாராக இருங்கள் நான் ஏர் கண்டிஷன் அறையில் இருக்கிறேன் எனக்குக் கவலையில்லை அடுத்த வருடம் உங்களுக்குச் சங்குதான்’ ஏனெனில் எமது பணவீக்கம் ஒன்பதாக மாறும்’ என்று.
நான் சொல்வது என்னவென்றால் இந்த நாட்டு மக்களே கிறிஸ்மஸ் காலத்தில் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுங்கள் தண்ணீர் போத்தல்களைக் கொஞ்சம் அதிகமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்;
அதனால் மத்திய வங்கி ஆளுநர் போக மாட்டார். இப்போது அவரின் சேவைக்காலம் நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன. இவருக்கு ஆறு வருட ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் கீழே உள்ளது இன்னும் ஒருமுறை ஆறு வருடங்கள் கொடுக்கலாம் என்று. இரண்டு தடவைகள் ஆறு வருடங்கள். அப்படியென்றால் ஓய்வு பெறுவது இவருக்கு 74 வயதாகும் போது.இன்னும் எட்டு வருடங்களுக்குப் பிறகு என தெரிவித்துள்ளார்.




