Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-2°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -6°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -4°
  • மிசிசாகா -3°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

ட்ரம்பின் புதிய வரி விதிப்பு அச்சம் – அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, Nasdaq-100 எதிர்காலப் பங்கு வர்த்தகம் 2.5 சதவீதத்தாலும், S&P 500 குறியீடு 1.2 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன. Dow Jones எதிர்காலப் பங்கு வர்த்தகமும் 279 புள்ளிகளால் (0.6 சதவீதம்) சரிவடைந்துள்ளது.

நேற்று (23) என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 31 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், இன்று (24) முற்பகல் வர்த்தகத்தில் 3 முதல் 5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

இதேவேளை, ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு காணப்பட்டதுடன், தென்கொரியாவின் KOSPI குறியீடு 6.32 சதவீதம் உயர்ந்த அதேவேளை, ஜப்பானின் Nikkei 225 குறியீடு 3.91 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் தொழில்நுட்பத் துறை பங்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.16 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.03 அமெரிக்க டொலராகவும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.