Wednesday, 25 November 2026
கனடா வானிலை
1°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு -4°
  • ஈரப்பதம் 69%
  • காற்று 14 km/h
  • ஸ்காபரோ -2°
  • மார்க்கம் -1°
  • பிரம்டன் -2°
  • மிசிசாகா -1°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்… சுவிஸ் தூதரக அலுவலருக்கு வடகொரியா உத்தரவு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் : ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் பலி அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் : ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் பலி

காஸாவில் ஹமாஸ் அமைப்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவரான நயீம் அபு நஹேல், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

காஸாவின் ஹமாஸ் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மேற்கு காஸா நகரில் விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

50 வயதான அபு நஹேல், கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்தப் பதவியை வகித்து வந்தார்.

அவரது முன்னைய அதிகாரி, இஸ்ரேலிய சிறப்புப் படையினரின் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர், அபு நஹேல் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்று செவ்வாய்க்கிழமை காஸாவின் ஏனைய பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மீட்புப் பணியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் கட்டமைப்பை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் மீதே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்த போதிலும், காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினமும் தொடர்கின்றன.

அந்தப் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதுவரை காஸாவில் குறைந்தது 1,679 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நிர்வாகத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புள்ளிவிபரங்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் நம்பகமானவையாகக் கருதப்படுகின்றன.

இதே காலப்பகுதியில் காஸாவில் ஆறு இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

2023 ஒக்டோபர் 7ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான குழுக்கள் நடத்திய தாக்குதலே காஸா போர் ஆரம்பமாவதற்குக் காரணமாக அமைந்தது.

அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 74,740க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.