Sunday, 29 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
பெரும்பாலும் தெளிவு
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 4°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.02%
  • EUR 1.56 ▼ 0.20%
  • GBP 1.87 ▲ 0.03%
  • CHF 1.70 ▼ 0.13%
  • AUD 0.95 ▲ 0.35%
  • 1 CAD → LKR 233.72 ▲ 0.08%
  • 1 CAD → INR 65.14 ▲ 0.33%
  • AED 0.39 ▲ 0.02%
புதுப்பிப்பு: 2026-11-28 23:40
அண்மைச் செய்திகள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு! சாப்பிட முடியாத பொருட்களையும் சாப்பிட்ட மனிதர்… மருத்துவர்களையே வியக்க வைத்த உடல்! மூன்று நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தது கனடா கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 SpaceX பங்குகள் இலவசம்: எலான் மஸ்க் அறிவிப்பு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டவெடிப்பில் 7 மாணவர்கள் உயிரிழப்பு 97 பேர் காயம் எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறை கண்டுபிடிப்பு ராகு மற்றும் கேது பெயர்ச்சியில் இந்த ராசிகளுக்கு அதிக கவனம் தேவை! இன்றைய ராசிபலன் – நவம்பர் 28, 2026 சனி பாகுபலி 2’வைப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது ‘ராமாயணா’!
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் – அரசாங்கம் வெளியிட்ட புதிய தகவல்!

எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணி வெளியேற்றம் உள்ளிட்ட வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதார அடிப்படைகள் மேம்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
S&P Global Ratings நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சராசரி செலவினத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் இறக்குமதிக்காக மேலதிகமாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் கடன் மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கக் கடன் அதிகரித்த வேகத்தை விட பொருளாதார வளர்ச்சி அதிகமாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடன் மதிப்பீட்டை முந்தைய நிலைக்குக் கொண்டுசெல்வதுடன், பொருளாதாரத்தின் மீள்திறனை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் காலநிலை தொடர்பான அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளிப்புற நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இந்த இலக்கை அடைவதற்கான காலக்கெடுவைத் தற்போது குறிப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் வட்டி செலுத்தும் சுமை வருவாயில் சுமார் 40 வீதமாக இருப்பதாக S&P மதிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், முன்னர் இந்தச் சுமை சுமார் 80 வீதமாகக் காணப்பட்டதாகவும், தற்போது அது குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய காலக் கடன்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, நீண்டகாலக் கடன்களை நோக்கி அரசாங்கம் படிப்படியாக நகர்ந்து வருவதாகவும், கடன்களின் சராசரி முதிர்வுக் காலம் சுமார் ஆறு ஆண்டுகளிலிருந்து எட்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய கால உள்நாட்டுக் கடன்களில் தங்கியிருப்பதைக் குறைத்தல், கடன்களின் முதிர்வுக் காலத்தை நீட்டித்தல் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்களின் வெளிப்பாட்டைக் குறைத்தல் ஆகியவை அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவ மூலோபாயத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.