Sunday, 29 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
பெரும்பாலும் தெளிவு
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 4°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.02%
  • EUR 1.56 ▼ 0.20%
  • GBP 1.87 ▲ 0.03%
  • CHF 1.70 ▼ 0.13%
  • AUD 0.95 ▲ 0.35%
  • 1 CAD → LKR 233.72 ▲ 0.08%
  • 1 CAD → INR 65.14 ▲ 0.33%
  • AED 0.39 ▲ 0.02%
புதுப்பிப்பு: 2026-11-28 23:40
அண்மைச் செய்திகள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு! சாப்பிட முடியாத பொருட்களையும் சாப்பிட்ட மனிதர்… மருத்துவர்களையே வியக்க வைத்த உடல்! மூன்று நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தது கனடா கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 SpaceX பங்குகள் இலவசம்: எலான் மஸ்க் அறிவிப்பு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டவெடிப்பில் 7 மாணவர்கள் உயிரிழப்பு 97 பேர் காயம் எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறை கண்டுபிடிப்பு ராகு மற்றும் கேது பெயர்ச்சியில் இந்த ராசிகளுக்கு அதிக கவனம் தேவை! இன்றைய ராசிபலன் – நவம்பர் 28, 2026 சனி பாகுபலி 2’வைப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது ‘ராமாயணா’!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை

செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய இளைஞர் ஒருவர் கனடாவில் கல்வி கற்கச் சென்றிருந்த நிலையில், அவர் செக்யூரிட்டி கார்டாக பகுதி நேரப் பணி செய்துவந்துள்ளார். 

அவரது பெயர் ஹர்ஷன் தீப் சிங் (20). அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில், National Security Guard Protection Services Inc. என்னும் நிறுவனம் சார்பில், சிங் இரவு நேர பாதுகாவலராக பணியாற்றிவந்த நிலையில், 2024ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6ஆம் திகதி, காரணமே இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்ட லாசரஸ் இவான் (Lazarus Evan Chase Francis Rain, 31) மற்றும் ஜூடித் (Judith May Saulteaux, 31) ஆகிய இருவருக்குள்ளும் என்ன உறவு என்பது தெரியவில்லை.

சிங், எட்மண்டனிலுள்ள அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, இவானும் ஜூடித்தும் தேவையே இல்லாமல் அவரை வம்புக்கிழுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், துப்பாக்கியால் சிங்கைத் தாக்கிய இவான், அவரை அந்தக் கட்டிடத்திலுள்ள படிக்கட்டுகளில் இறங்கச் சொல்லி மிரட்டியிருக்கிறார்.

அவர் இறங்கவும், ஜூடித் சிங்கை படிகளில் தள்ளிவிட, இவான் சிங்கை பின்னாலிருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பொலிசாரை அழைக்க, சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிங்குக்கு உயிர் இருப்பதை கவனித்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து, பின் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், 10 நிமிடங்களுக்குப் பின் அவரது உயிர் பிரிந்துள்ளது.

காரணமே இல்லாமல் சிங்கை வம்புக்கிழுத்து சுட்டுக் கொன்ற இவானும், ஜூடித்தும் கைது செய்யப்பட்டனர். அடுத்த ஆண்டு அவர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு வர உள்ளது.

இந்நிலையில், சிங்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய National Security Guard Protection Services Inc. நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிங் கொல்லப்பட்ட அந்த இடத்தில் ஏற்கனவே வன்முறை நடந்துள்ளது என்பது தெரிந்திருந்தும் அது குறித்து முன்னெச்சரிக்கை எதுவும் எடுக்காத National Security Guard Protection Services Inc. நிறுவனம் மீது, பணியிட நலன் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.