Sunday, 29 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
பெரும்பாலும் தெளிவு
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 4°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.02%
  • EUR 1.56 ▼ 0.20%
  • GBP 1.87 ▲ 0.03%
  • CHF 1.70 ▼ 0.13%
  • AUD 0.95 ▲ 0.35%
  • 1 CAD → LKR 233.72 ▲ 0.08%
  • 1 CAD → INR 65.14 ▲ 0.33%
  • AED 0.39 ▲ 0.02%
புதுப்பிப்பு: 2026-11-28 23:40
அண்மைச் செய்திகள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு! சாப்பிட முடியாத பொருட்களையும் சாப்பிட்ட மனிதர்… மருத்துவர்களையே வியக்க வைத்த உடல்! மூன்று நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தது கனடா கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 SpaceX பங்குகள் இலவசம்: எலான் மஸ்க் அறிவிப்பு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டவெடிப்பில் 7 மாணவர்கள் உயிரிழப்பு 97 பேர் காயம் எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறை கண்டுபிடிப்பு ராகு மற்றும் கேது பெயர்ச்சியில் இந்த ராசிகளுக்கு அதிக கவனம் தேவை! இன்றைய ராசிபலன் – நவம்பர் 28, 2026 சனி பாகுபலி 2’வைப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது ‘ராமாயணா’!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரைக்கு அப்பால் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்ஹாட்டன் கடற்கரைக்கு தென்மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலும், 12.2 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தையடுத்து, லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் ஒன்றில் கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதுடன், எச்சரிக்கை ஒலிகளும் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், சாண்டா மோனிகா பகுதியில் கட்டடங்கள் மற்றும் மரங்கள் அதிர்ந்ததால், அங்குள்ள வர்த்தக நிலையங்களில் இருந்த மக்கள் அச்சமடைந்து வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, கட்டடங்களின் கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை ஆரம்பகட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாக இது இருக்கலாம் என புவி இயற்பியல் நிபுணர் லூசி ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடனும் தயார்நிலையுடனும் இருக்குமாறு கலிபோர்னியா அவசரகால சேவைகள் அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.