Sunday, 29 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
பெரும்பாலும் தெளிவு
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 4°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.02%
  • EUR 1.56 ▼ 0.20%
  • GBP 1.87 ▲ 0.03%
  • CHF 1.70 ▼ 0.13%
  • AUD 0.95 ▲ 0.35%
  • 1 CAD → LKR 233.72 ▲ 0.08%
  • 1 CAD → INR 65.14 ▲ 0.33%
  • AED 0.39 ▲ 0.02%
புதுப்பிப்பு: 2026-11-28 23:40
அண்மைச் செய்திகள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு! சாப்பிட முடியாத பொருட்களையும் சாப்பிட்ட மனிதர்… மருத்துவர்களையே வியக்க வைத்த உடல்! மூன்று நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தது கனடா கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 SpaceX பங்குகள் இலவசம்: எலான் மஸ்க் அறிவிப்பு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டவெடிப்பில் 7 மாணவர்கள் உயிரிழப்பு 97 பேர் காயம் எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறை கண்டுபிடிப்பு ராகு மற்றும் கேது பெயர்ச்சியில் இந்த ராசிகளுக்கு அதிக கவனம் தேவை! இன்றைய ராசிபலன் – நவம்பர் 28, 2026 சனி பாகுபலி 2’வைப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது ‘ராமாயணா’!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டவெடிப்பில் 7 மாணவர்கள் உயிரிழப்பு 97 பேர் காயம்


கிழக்கு ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 7 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் 97 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குணார் மாகாண தகவல் மற்றும் கலாசாரத் துறை இயக்குநர் மௌலவி சமி-உல்-ஹக் ஹக் பயான் மற்றும் பொலிஸ் தலைமையக செய்தித் தொடர்பாளர் பரித் தெஹ்கான் ஆகியோர் தெரிவித்த தகவல்படி, 

இன்று காலை சுமார் 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீடு ஒன்றில், குணார்-நூரிஸ்தான் சாலைப் பணிகளுக்காகச் சுரங்க வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை திடீரென வெடித்துச் சிதறியதாகவும் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் வெடிப்பில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் குணார் மாகாண மருத்துவமனைகளிலும், 4 பேர் மேல் சிகிச்சைக்காக ஜலாலாபாத்தில் உள்ள மண்டல மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் குணார் மாகாணத்தைச் சேர்ந்த தடயவியல் மற்றும் விசாரணைக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் காபூலில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த கைக்குண்டுத் தாக்குதலில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்த நிலையில் தற்போது இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.