நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ராமாயணா’ திரைப்படம் உலகளாவிய வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த நவம்பர் 5ஆம் திகதி வெளியான இந்த திரைப்படம், 23 நாட்களில் உலகளவில் ரூ.1,790.10 கோடி வசூலித்துள்ளது.
இதில் இந்தியாவில் ரூ.1,195.10 கோடியும், வெளிநாடுகளில் ரூ.595 கோடியும் வசூலாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.1,000.55 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் உலகளாவிய வாழ்நாள் வசூலான ரூ.1,788.06 கோடியை ‘ராமாயணா’ முறியடித்துள்ளது.
மேலும், இந்தியாவில் ரூ.1,000 கோடி நிகர வசூலைக் கடந்த நான்காவது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
உலகளவில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் மேலும் முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.







