Friday, 27 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 94%
  • காற்று 16 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 4°
  • பிரம்டன் 2°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 16:26
அண்மைச் செய்திகள்
டொரொன்டோவில் பயங்கரம்: வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல இசைக்கலைஞர் பலி கனடாவில் Black Friday தள்ளுபடி: மோசடிகள் குறித்து நுகர்வோருக்கு எச்சரிக்கை! 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக யோர்க்டன் நகருக்குச் சென்ற கனடா பிரதமர்! திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திராட்சைத் தோட்டத்தால் வெடித்த மோதல் – வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி! அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த புயல் – 22 இலட்சம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! GTA 6 விளையாட்டில் நெகிழ்ச்சியான நினைவஞ்சலி – ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துக்குக் குவியும் பாராட்டு! ‘புஷ்பா 2’வை பின்னுக்குத் தள்ளிய ‘ராமாயணா’ மகாராஜாவை பார்த்து மிரண்ட டாம் ஹேங்க்ஸ்! நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!
விளம்பரம்விளம்பரம்
சினிமா பிளஸ்

வரலாறு படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’

ஹாலிவுட் திரைப்படத் தொடரான ​​’அவெஞ்சர்ஸ் – டூம்ஸ்டே’ அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.


அதிக எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டிரெய்லர் தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியானது.


கடந்த நவம்பர் 23 ஆம் திகதி வெளியான இப்படத்தின் இறுதி டிரெய்லர், முதல் 24 மணி நேரத்திலேயே 563 மில்லியன் (56.3 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.


மார்வெல் நிறுவனத்தை உள்ளடக்கிய டிஸ்னி நிறுவனம் வரலாற்றிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையை ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படைத்துள்ளது.


மேலும், உலக அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற திரைப்பட டிரெய்லர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.


இதற்கு முன்பு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 503 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. தற்போது இறுதி டிரெய்லர் அந்த சாதனையையும் முறியடித்துள்ளது.


அதேபோல், ‘டெட்பூல் அண்ட் வால்வரின்’ படத்தின் சூப்பர் பவுல் டீசர் பெற்ற 365 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.


2019 இல் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்திற்குப் பிறகு, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருந்து வெளிவரும் அவெஞ்சர்ஸ் தொடர் படம் இதுவாகும்.


இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். மார்வெல் சூப்பர் ஹீரோ கதைகளில் மிகவும் பிரபலமான நடிகரான ராபர்ட் டவுனி ஜூனியர், இம்முறை ‘டாக்டர் டூம்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் காணப்படுகிறார்.


மேலும் கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டாம் ஹிடில்ஸ்டன், ப்ளோரன்ஸ் பியூ, செபாஸ்டியன் ஸ்டான், அந்தோனி மேக்கி, பெட்ரோ பாஸ்கல் மற்றும் பால் ரட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்திய பாக்ஸ் ஆபிஸில் வெளியாவதற்கு முன்பே இப்படம் சாதனை படைத்து வருகிறது. நவம்பர் 17 ஆம் திகதி இந்தியாவிலும் 18 ஆம் திகதி பிற நாடுகளிலும் படம் வெளியாகிறது.


டிக்கெட் விற்பனை இந்தியாவில் மட்டுமே 50 கோடி ரூபா என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.


‘ராமாயணா’ மற்றும் ‘துரந்தர் 2’ போன்ற சமீபத்திய படங்கள், வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பே 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்தன.


‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கும் மேலாக இருக்கும்போதே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.