Friday, 27 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 94%
  • காற்று 16 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 4°
  • பிரம்டன் 2°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 16:26
அண்மைச் செய்திகள்
டொரொன்டோவில் பயங்கரம்: வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல இசைக்கலைஞர் பலி கனடாவில் Black Friday தள்ளுபடி: மோசடிகள் குறித்து நுகர்வோருக்கு எச்சரிக்கை! 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக யோர்க்டன் நகருக்குச் சென்ற கனடா பிரதமர்! திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திராட்சைத் தோட்டத்தால் வெடித்த மோதல் – வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி! அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த புயல் – 22 இலட்சம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! GTA 6 விளையாட்டில் நெகிழ்ச்சியான நினைவஞ்சலி – ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துக்குக் குவியும் பாராட்டு! ‘புஷ்பா 2’வை பின்னுக்குத் தள்ளிய ‘ராமாயணா’ மகாராஜாவை பார்த்து மிரண்ட டாம் ஹேங்க்ஸ்! நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக யோர்க்டன் நகருக்குச் சென்ற கனடா பிரதமர்!

கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக, பதவியில் இருக்கும் கனடா பிரதமர் ஒருவர் சஸ்காட்சுவான் மாகாணத்தின் யோர்க்டன் நகருக்கு விஜயம் செய்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள யோர்க்டன்-மெல்வில் தொகுதி இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் யோர்க்டன் நகர மேயர் ஆரோன் கின்லியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகவே பிரதமர் மார்க் கார்னி அங்கு சென்றிருந்தார்.

யோர்க்டனிலுள்ள ‘டியர் பார்க் கோல்ஃப் மைதானத்தில்’ சுமார் 240 ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் கார்னி, “ஆரோன் கின்லி ஒரு அசாதாரணமான நபர்; ஒட்டாவாவில் எம்முடன் இணைந்து பணியாற்றுவதற்கு இத்தகைய ஒருவரே எமக்குத் தேவை. இது யோர்க்டன், மெல்வில், சஸ்காட்சுவான் மற்றும் எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும்” எனத் தெரிவித்தார்.

1910 ஆம் ஆண்டுக்குப் பின்னர் லிபரல் பிரதமர் ஒருவர் யோர்க்டன் நகருக்கு வருவது இதுவே முதல்முறை எனக் குறிப்பிட்ட கார்னி, கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையாக விளங்கும் சஸ்காட்சுவானில் மாற்றத்தை ஏற்படுத்த லிபரல் கட்சி வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாகக் கூறினார்.

வடக்கு சஸ்காட்சுவானின் மெக்கில்வென்னா பே செப்புச் சுரங்கத் திட்டம் மற்றும் மேயர் கின்லியின் விடாமுயற்சியால் ஒட்டாவாவிலிருந்து நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட யோர்க்டன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“கடந்த 11 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஒருவரால் எமக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தர முடியவில்லை. எனவே, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு சமூகத்திற்குப் பலன்களைப் பெற்றுத்தரும் ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என லிபரல் வேட்பாளர் ஆரோன் கின்லி வலியுறுத்தினார்.

கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தி வாகன்டால் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.