Friday, 27 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 94%
  • காற்று 16 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 4°
  • பிரம்டன் 2°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 16:26
அண்மைச் செய்திகள்
டொரொன்டோவில் பயங்கரம்: வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல இசைக்கலைஞர் பலி கனடாவில் Black Friday தள்ளுபடி: மோசடிகள் குறித்து நுகர்வோருக்கு எச்சரிக்கை! 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக யோர்க்டன் நகருக்குச் சென்ற கனடா பிரதமர்! திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திராட்சைத் தோட்டத்தால் வெடித்த மோதல் – வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி! அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த புயல் – 22 இலட்சம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! GTA 6 விளையாட்டில் நெகிழ்ச்சியான நினைவஞ்சலி – ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துக்குக் குவியும் பாராட்டு! ‘புஷ்பா 2’வை பின்னுக்குத் தள்ளிய ‘ராமாயணா’ மகாராஜாவை பார்த்து மிரண்ட டாம் ஹேங்க்ஸ்! நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!
விளம்பரம்விளம்பரம்
சினிமா பிளஸ்

மகாராஜாவை பார்த்து மிரண்ட டாம் ஹேங்க்ஸ்!

தமிழ் திரைப்படம் ‘மகாராஜா’ சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டாம் ஹேங்க்ஸ், சச்சனா நமிதாஸின் நடிப்பை பாராட்டி, ‘அந்த நபரின் கதாபாத்திரத்தை நானாக இருந்தால் கொன்றிருப்பேன்’ என உணர்ச்சிவசப்பட்டார். ஹாலிவுட் ரீமேக் திட்டமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் `மகாராஜா’. இந்திய ரசிகர்களிடம் மட்டுமின்றி சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தைப் பார்த்து ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் வியந்து பாராட்டியுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருடன் உரையாடிய International Academy of Television Arts & Sciences நிர்வாகக் குழு உறுப்பினர் கவிதா குப்தா, டாம் ஹேங்க்ஸ் மகாராஜா திரைப்படம் குறித்துப் பேசிய சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற LACMA கலை நிகழ்ச்சி ஒன்றில் கவிதா குப்தாவைச் சந்தித்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ், இந்தியாவில் இருந்து பார்க்க வேண்டிய மூன்று திரைப்படங்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் பரிந்துரைத்த திரைப்படங்களில் விஜய் சேதுபதியின் மகாராஜாவும் ஒன்று.


இதையடுத்து, சில வாரங்கள் கழித்து நவம்பர் 7 ஆம் திகதி நடைபெற்ற மற்றொரு LACMA நிகழ்ச்சியில் டாம் ஹேங்க்ஸை மீண்டும் சந்தித்தபோது, அவர் தானாகவே மகாராஜா திரைப்படம் குறித்துப் பேசியுள்ளார்.


மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா நமிதாஸின் நடிப்பு டாம் ஹேங்க்ஸை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


இதுகுறித்து கவிதா குப்தா பகிர்ந்துகொண்டபோது, டாம் ஹாங்க்ஸ், “என்னால் அந்தப் பெண்ணைப் பற்றிய நினைப்பிலிருந்து இன்னும் வெளிவர முடியவில்லை. என்னவொரு அற்புதமான நடிகை! அந்தக் கதையில் வரும் அந்த நபரை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது, நானாக இருந்திருந்தால் அவரைக் கொன்றிருப்பேன்.


என்னால் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கமுடியும் என நம்பவில்லை” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, சச்சனா நமிதாஸின் நடிப்பை ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான டாம் ஹாங்க்ஸ் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்பட உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.


சீனாவில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஹாலிவுட் நிறுவனம் ரீமேக் உரிமையைக் கோரி அணுகியதாக அவர் கூறியிருந்தார். மேலும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானகே நடிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால், அவரது நடிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருபுறம் ஹாலிவுட் ரீமேக், மறுபுறம் டாம் ஹேங்க்ஸின் பாராட்டு என சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்.