Friday, 27 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 1°
  • ஈரப்பதம் 95%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ 4°
  • மார்க்கம் 4°
  • பிரம்டன் 2°
  • மிசிசாகா 3°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 19:26
அண்மைச் செய்திகள்
டொரொன்டோவில் பயங்கரம்: வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல இசைக்கலைஞர் பலி கனடாவில் Black Friday தள்ளுபடி: மோசடிகள் குறித்து நுகர்வோருக்கு எச்சரிக்கை! 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக யோர்க்டன் நகருக்குச் சென்ற கனடா பிரதமர்! திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திராட்சைத் தோட்டத்தால் வெடித்த மோதல் – வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி! அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த புயல் – 22 இலட்சம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! GTA 6 விளையாட்டில் நெகிழ்ச்சியான நினைவஞ்சலி – ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துக்குக் குவியும் பாராட்டு! ‘புஷ்பா 2’வை பின்னுக்குத் தள்ளிய ‘ராமாயணா’ மகாராஜாவை பார்த்து மிரண்ட டாம் ஹேங்க்ஸ்! நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!
விளம்பரம்விளம்பரம்
சினிமா பிளஸ்

திராட்சைத் தோட்டத்தால் வெடித்த மோதல் – வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி!

ஹொலிவுட் கலைஞர்களான பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஆகியோருக்கு இடையே பிரான்ஸில் உள்ள திராட்சைத் தோட்டத்தின் உரிமை தொடர்பாகப் பல ஆண்டுகளாக நிலவி வந்த சட்ட விவகாரம் உடன்பாட்டில் நிறைவடைந்துள்ளது. 

இருவரும் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு கண்டுள்ளதாக அவர்களின் பிரதிநிதிகள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

 “எமது குடும்பத்தின் நலன் கருதி நீதிமன்றத்திற்கு வெளியே இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டுள்ளோம்; இது குறித்து மேலதிக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப் போவதில்லை” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2008ஆம் ஆண்டு பிரான்ஸிலுள்ள ‘Château Miraval’ திராட்சைத் தோட்டத்தின் பெரும்பான்மை உரிமையைப் பெற்ற இவர்கள், 2014ஆம் ஆண்டு அங்கேயே திருமணம் செய்து கொண்டனர்.

 எனினும், தனது அனுமதியின்றி ஏஞ்சலினா ஜோலி தனது பங்குகளை ரஷ்ய தொழிலதிபர் யூரி ஷெஃப்லரின் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக பிராட் பிட் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 அதற்குப் பதிலடியாக, 2016ஆம் ஆண்டு தனியார் வானூர்தியில் பயணித்த போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக ஏஞ்சலினா ஜோலி எதிர் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

எனினும், காவல்துறை விசாரணைகளின் பின்னர் பிராட் பிட் மீது குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

8 ஆண்டுகளாக நடைபெற்ற விவாகரத்து நடைமுறையில் கடந்த ஆண்டு இறுதியில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தற்போது இருவரும் ஒருவருக்கொருவர் எதிராகத் தொடர்ந்திருந்த வழக்குகளும் முடிவுக்கு வருகின்றன.

எனினும், ரஷ்ய தொழிலதிபருக்குச் சொந்தமான ‘Stoli Group’ நிறுவனத்திற்கு எதிராக பிராட் பிட் தொடர்ந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2005ஆம் ஆண்டு வெளியான ‘Mr. & Mrs. Smith’ திரைப்படத்தின் போது இணைந்த இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். 

இவர்கள் பிரிந்ததன் பின்னர், அவர்களில் நான்கு பிள்ளைகள் தமது குடும்பப் பெயரைச் சட்டப்பூர்வமாக ‘Jolie’ என மாற்றிக்கொண்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.