Friday, 27 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
தூறல்
  • உணர்வு -0°
  • ஈரப்பதம் 95%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 2°
  • மிசிசாகா 3°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 16:26
அண்மைச் செய்திகள்
டொரொன்டோவில் பயங்கரம்: வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல இசைக்கலைஞர் பலி கனடாவில் Black Friday தள்ளுபடி: மோசடிகள் குறித்து நுகர்வோருக்கு எச்சரிக்கை! 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக யோர்க்டன் நகருக்குச் சென்ற கனடா பிரதமர்! திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திராட்சைத் தோட்டத்தால் வெடித்த மோதல் – வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி! அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த புயல் – 22 இலட்சம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! GTA 6 விளையாட்டில் நெகிழ்ச்சியான நினைவஞ்சலி – ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துக்குக் குவியும் பாராட்டு! ‘புஷ்பா 2’வை பின்னுக்குத் தள்ளிய ‘ராமாயணா’ மகாராஜாவை பார்த்து மிரண்ட டாம் ஹேங்க்ஸ்! நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்திகள்

GTA 6 விளையாட்டில் நெகிழ்ச்சியான நினைவஞ்சலி – ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துக்குக் குவியும் பாராட்டு!

பிரபல வீடியோ கேமான ‘GTA 6’ இல், ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவன ஊழியர்களின் மறைந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் நினைவுப் பலகை அமைக்கப்பட்டுள்ளமை இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அந்த வகையில், நிறுவனத்தின் முன்னணி விளையாட்டு மென்பொருள் நிரலாக்குநரான பிராட்லி ஸ்டோனின் ஐந்து மாதக் கர்ப்பத்தில் உயிரிழந்த மகள் ஈவ்லின் ஸ்டோனின் பெயர் விளையாட்டில் இடம்பெற்றுள்ள நினைவுப் பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் நினைவாக இந்த ஏற்பாட்டைச் செய்த ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ள பிராட்லி ஸ்டோன், தங்களது துயரமான நினைவுகளைப் போற்றுவதற்கு இந்த வாய்ப்பு உதவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, நிறுவனத்தின் மற்றொரு ஊழியரான மெட் கிரீனின் மறைந்த தாயார் பெவ் கிரீனின் பெயரும் குறித்த நினைவிடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளரான டெரன்ஸ் ராட்க்ளிஃப் தனது மறைந்த தந்தை மற்றும் மகள் ஜேட் ஆகியோரின் பெயர்களும் விளையாட்டில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் தனிப்பட்ட துயரங்களையும் நினைவுகளையும் மதித்து, அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு விளையாட்டின் ஊடாக நினைவஞ்சலி செலுத்திய ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்