Friday, 27 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
லேசான மழை
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 96%
  • காற்று 14 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 2°
  • மிசிசாகா 3°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 16:26
அண்மைச் செய்திகள்
டொரொன்டோவில் பயங்கரம்: வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல இசைக்கலைஞர் பலி கனடாவில் Black Friday தள்ளுபடி: மோசடிகள் குறித்து நுகர்வோருக்கு எச்சரிக்கை! 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக யோர்க்டன் நகருக்குச் சென்ற கனடா பிரதமர்! திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திராட்சைத் தோட்டத்தால் வெடித்த மோதல் – வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி! அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த புயல் – 22 இலட்சம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! GTA 6 விளையாட்டில் நெகிழ்ச்சியான நினைவஞ்சலி – ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துக்குக் குவியும் பாராட்டு! ‘புஷ்பா 2’வை பின்னுக்குத் தள்ளிய ‘ராமாயணா’ மகாராஜாவை பார்த்து மிரண்ட டாம் ஹேங்க்ஸ்! நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல்தூணில் நாளை (28) தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தர்காவிலிருந்து 50 மீற்றர் சுற்றளவுக்கு அப்பால் அனைத்துப் பக்கங்களிலும் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் மத்திய ரிசர்வ் காவல்துறையின் (CRPF) பாதுகாப்பின் கீழ் கொண்டுவரவும், தர்காவுக்கும் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தர்காவின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அக்குழு செயற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், கோயில் நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் நிர்வாகக் குழுவொன்றையும் நியமித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.