Sunday, 29 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
பெரும்பாலும் தெளிவு
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 4°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.02%
  • EUR 1.56 ▼ 0.20%
  • GBP 1.87 ▲ 0.03%
  • CHF 1.70 ▼ 0.13%
  • AUD 0.95 ▲ 0.35%
  • 1 CAD → LKR 233.72 ▲ 0.08%
  • 1 CAD → INR 65.14 ▲ 0.33%
  • AED 0.39 ▲ 0.02%
புதுப்பிப்பு: 2026-11-28 23:40
அண்மைச் செய்திகள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு! சாப்பிட முடியாத பொருட்களையும் சாப்பிட்ட மனிதர்… மருத்துவர்களையே வியக்க வைத்த உடல்! மூன்று நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தது கனடா கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 SpaceX பங்குகள் இலவசம்: எலான் மஸ்க் அறிவிப்பு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டவெடிப்பில் 7 மாணவர்கள் உயிரிழப்பு 97 பேர் காயம் எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறை கண்டுபிடிப்பு ராகு மற்றும் கேது பெயர்ச்சியில் இந்த ராசிகளுக்கு அதிக கவனம் தேவை! இன்றைய ராசிபலன் – நவம்பர் 28, 2026 சனி பாகுபலி 2’வைப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது ‘ராமாயணா’!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

சாப்பிட முடியாத பொருட்களையும் சாப்பிட்ட மனிதர்… மருத்துவர்களையே வியக்க வைத்த உடல்!

சாதாரண மனிதர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத வகையில், முழு வானூர்தி ஒன்றையே சாப்பிட்டு உலக சாதனை படைத்த பிரான்ஸைச் சேர்ந்த மைக்கேல் லோடிடோவின் வியப்பூட்டும் சம்பவம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

பிரான்ஸின் கிரெனோபில் நகரைச் சேர்ந்த மைக்கேல் லோடிடோ, தனது 16 வயது முதல் உலோகம், கண்ணாடி மற்றும் ரப்பர் போன்ற உணவு அல்லாத பொருட்களைச் சாப்பிடும் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 1978ஆம் ஆண்டு முழுமையான ‘செஸ்னா 150’ ரக வானூர்தி ஒன்றைச் சாப்பிடும் முயற்சியை ஆரம்பித்த அவர், 1980ஆம் ஆண்டில் அதனை முழுமையாகச் சாப்பிட்டு முடித்துள்ளார். இதன் மூலம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

வானூர்தியை ஒரே நேரத்தில் சாப்பிடாமல், அதன் பாகங்களை ஆயிரக்கணக்கான சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது சிறிதாக உட்கொண்டுள்ளார். உலோகத் துண்டுகளை விழுங்கும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக மினரல் எண்ணெய் மற்றும் அதிகளவு தண்ணீரையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

மருத்துவப் பரிசோதனைகளின்போது, உணவு அல்லாத பொருட்களை உட்கொள்ளும் ‘பிக்கா’ (Pica) எனப்படும் அரிய நிலை அவருக்கு இருந்தமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வயிற்றின் உட்சுவர் சாதாரண மனிதர்களைவிட இரு மடங்கு தடிமனாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வானூர்தி மட்டுமன்றி, 18 மிதிவண்டிகள், 15 வணிக வண்டிகள், 7 தொலைக்காட்சிப் பெட்டிகள், 6 சரவிளக்குகள், ஒரு கணினி மற்றும் ஒரு சவப்பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் அவர் தனது வாழ்நாளில் உட்கொண்டுள்ளார்.

மொத்தமாக சுமார் 9 தொன் உலோகப் பொருட்களைச் சாப்பிட்டதாகக் குறிப்பிடப்படும் மைக்கேல் லோடிடோ, 2007ஆம் ஆண்டு தனது 57ஆவது வயதில் இயற்கையான காரணங்களால் உயிரிழந்துள்ளார்.