ChatGPT செயலியை உருவாக்கிய OpenAI நிறுவனம், தனது வணிக மற்றும் தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டி Apple நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள மத்திய நீதிமன்றத்தில், கடந்த 27ஆம் திகதி OpenAI நிறுவனம் எதிர் உரிமைக் கோரிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
OpenAI நிறுவனத்தின் புதிய சாதனங்கள் மற்றும் எதிர்கால வன்பொருள் தயாரிப்புத் திட்டங்கள் தொடர்பான இரகசியத் தகவல்களை அணுகியிருந்த முன்னாள் ஊழியர் ஒருவரை Apple நிறுவனம் மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், OpenAI நிறுவனத்தின் எதிர்காலத் தொழில்நுட்பச் சாதனங்களுக்கான உற்பத்திக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என வன்பொருள் விநியோகஸ்தர்களுக்கு Apple நிறுவனம் அழுத்தம் கொடுத்ததாகவும் OpenAI தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் போட்டித்தன்மை வாய்ந்த நுகர்வோர் சாதனங்களை உருவாக்கும் தனது திட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதே இதன் நோக்கம் எனவும் அந்த நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கு முன்னதாக, Apple நிறுவனம் தனது ஊழியர்களை OpenAI நிறுவனம் பணியமர்த்தியதன் மூலம் வணிக இரகசியங்கள் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, OpenAI மற்றும் அதன் ஊழியர்களான Tang Tan, Chang Liu ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்நிலையில், Apple நிறுவனத்தின் பணியமர்த்தல் நடைமுறைகள், போட்டி நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் OpenAI நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.







